Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 57 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
"நம்மிடமிருந்து ஒரு விடயத்தைக் கேட்டு, அதைக் கேட்டது போன்றே பிறருக்கு எத்திவைப்பருக்கு அல்லாஹ் செலிப்பை ஏற்படுத்துவானாக. அதை நேரடியாகக் கேட்டவரை விட எத்திவைக்கப்பட்டவர் அதிக அறிவுடையவராக இருக்கலாம்".
சரியானது இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
'நீங்கள் உங்களின் விடயங்ளை அல்லாஹ்வின் மீது உண்மையாகவே பொறுப்புச் சாட்டினால் பறவைகளுக்கு உணவளிப்பதைப் போன்று உங்களுக்கும் உணவளிப்பான். அவை அதிகாலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் நிரம்பிய வயிற்றுடன் திரும்புகின்றன'.
சரியானது இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
'அறிஞர்களிடம் பெருமையடித்துக்; கொள்வதற்காகவோ,முட்டாள்களுடன் தர்க்கம் புரிவதற்காகவோ,சபைகளில் (ஏனையோரைவிட) முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவோ,அறிவைத் தேடாதீர்கள்.யார் இவ்வாறு நடந்து கொள்கிறோ அவருக்கு நரகமே கிடைக்கும் ';
சரியானது இதனை இமாம் இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்
எந்தப் பெண்ணாவது தனது பொறுப்புதாரிகளின் அனுமதியின்றி திருமணம் செய்தால், அவளது திருமணம் செல்லாது, செல்லாது, செல்லாது. அவன் அவளுடன் உறவு கொண்டிருந்தால், அதனால் மஹர் அவளுக்குரியதாகிவிடும். அவர்கள் (பொறுப்புதாரிகள்) முரண்பட்டுக் கொண்டால், பொறுப்புதாரி அற்றவர்களுக்கு ஆட்சியாளரே பொறுப்புதாரியாவார்.
சரியானது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் ஒரு மனிதனை விடுதலை செய்வான். அவனது குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட தொண்ணூற்றி ஒன்பது ஏடுகள் அவன் முன் விரிக்கப்படும். ஒவ்வொரு ஏடும் பார்வை எட்டும் தொலைவில் இருக்கும். இவற்றில் எதையேனும் மறுக்கிறாயா? நம்பகமான எனது எழுத்தாளர்கள் உனக்கு அநியாயம் செய்து விட்டார்களா? என்று இறைவன் கேட்பான். இல்லை இறைவா! என்று அவன் கூறுவான். அக்குற்றங்களுக்கு உன்னிடம் எதாவது நியாயமான காரணம் ஏதும் உள்ளதா? என்று இறைவன் கேட்பான்.இல்லை இறைவா! என்று அவன் கூறுவான். அப்போது இறைவன் 'நிச்சயமாக உனக்கு என்னிடத்தில் நல்லதே கிடைக்கும், இன்று உமக்கு எந்த அநீதியும் கிடையாது, என்று கூறுவான். பிறகு சிறிய துண்டுச் சீட்டு ஒன்று எடுத்துக்காட்டப்படும்; அதில் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸுலு{ஹு என்று எழுதப்பட்டிருக்கும். 'உனது செயலின் எடையைப்பார்' என்று இறைவன் கூறுவான். அதற்கு அம்மனிதன் இறைவா! அந்தத் துண்டுச்சீட்டு அந்த ஏடுகளுக்கு எப்படி நிகராகும்? என்று கேட்பான். (இன்றைய தினம்) உனக்கு எந்த அநியாயமும் செய்யப்படமாட்டாது என்று இறைவன் கூறுவான். அந்த ஏடுகள் அனைத்தும் ஒரு தட்டிலும் அந்தத் துண்டுச் சீட்டு இன்னொரு தட்டிலும் வைக்கப்படும். ஏடுகள் உயர்ந்து துண்டுச்சீட்டு வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கும். அல்லாஹ்வின் திருநாமத்திற்கு நிகராக எதுவும் கனதியாக இருக்காது என்று நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
சரியானது இமாம் திர்மிதி, இமாம் இப்னு மாஜா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது
உங்களில் யாராவது, உடலில் ஆரோக்கியத்துடனும், தன் வீடு மற்றும் குடும்பத்தில் பாதுகாப்புடனும், அன்றைய தினத்துக்கு அவசியமான உணவு கையில் இருக்கும் நிலையிலும் காலைப் பொழுதை அடைகின்றாரோ, அவர் முழு உலகமும் வழங்கப்பட்டதைப் போன்றவர் ஆகும்.
நம்பகமானது (ஹஸன்) இமாம் திர்மிதி, இமாம் இப்னு மாஜா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது
''ஒருவர் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பது கூடாது''.
நம்பகமானது (ஹஸன்) இதனை இமாம்களான இப்னுமாஜா, தாரகுத்னி, மற்றும் பலரும் அறிவிப்பாளர் தொடர் அருபடாமல் அறிவித்துள்ளனர்.
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது இடது கையில் பட்டையும், வலது கையில் தங்கத்தையும் எடுத்து, இரு கைகளையும் உயர்த்தி, 'இந்த இரண்டும் என் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளன, பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன' என்று கூறினார்கள்”.
சரியானது இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னுமாஜா ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது