Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 10 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
"நான்கு குணங்கள் எவனிடம் உள்ளனவோ அவன் தெளிவான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் உள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும். (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வதும், பேசும் போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்து கொண்டால் நம்பிக்கை துரோகம் செய்வதும், வழக்காடினால் நேர்மை தவறுவதும்தான் அவை (நான்கும்) ஆகும்."
சரியானது இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்
மக்களிடம் இரு பண்புகள் உள்ளன. அவை அவர்களிடம் இறைநிராகரிப்பை ஏற்படுத்திவிடும் : வம்சத்தில் குறைகூறுவது, மரணித்த ஒருவருக்காக ஒப்பாரி வைத்து அழுவது.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நயவஞ்சகனின் நிலை இரு ஆண் ஆடுகளை சுற்றிவரும் பெண் ஆட்டின் நிலையைப் போன்றதாகும். ஒரு முறை அதனிடம் செல்கிறது; மறுமுறை வேறு ஒன்றிடம் செல்கிறது.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'நிச்சயமாக ஒரு (முஸ்லிம்) அடியானுக்கும்; இணைவைப்பிற்கும் இறைநிராகரிப்பிற்கும் இடையிலான வித்தியாசம் தொழுகையை விடுவதாகும் '.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
யாராவது ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனைப் பார்த்து, 'பாவி' என்றோ, 'காபிர்' என்றோ கூறி, உண்மையில் அம்மனிதன் அவ்வாறில்லாவிட்டால், அத்தீர்ப்பு அவனுக்கே திரும்பி வந்துவிடும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நான்கு பண்புகள் உள்ளன. அவை எவரிடத்தில் உள்ளதோ அவர்; மிகத்தெளிவான நயவஞ்கராவார். இந்தப் பண்புகளில் ஏதாவது ஒன்று ஒருவரிடம் காணப்படுமாயின் அவர் அதனை விட்டும் வரையில் அவரிடம் நயவஞ்சகத்தின் பண்புகளில் ஒன்று உள்ளது. அப்பண்புகளாவன. பேசினால் பொய்யுரைப்பான். ஒப்பந்தம் செய்தால் அதில் மோசடி செய்வான். வாக்களித்தால் மாறுசெய்வான். வழக்காடினால் -விவாதம் செய்தால்- நேர்மை தவறி நடந்து கொள்வான்”.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் '{ஹுதைபிய்யா' எனுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம். என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கும் மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர்களாவர். இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவர்களாவர் என்று இறைவன் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்லலல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'யார் அல்லாஹ்வை இணைவைக்காத நிலையில் சந்திக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார். யார் அவனை இணைவைத்த நிலையில் சந்திக்கிறாரோ அவர் நரகில் நுழைவார்'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்