Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 26 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'இறைத்தூதர் அவர்களே! 'நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்தவற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப் படுவோமா?' என ஒருவர் கேட்டதற்கு, 'இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்கள் கூறினார்கள்'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'யார் அல்லாஹ்வை இணைவைக்காத நிலையில் சந்திக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார். யார் அவனை இணைவைத்த நிலையில் சந்திக்கிறாரோ அவர் நரகில் நுழைவார்'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது'
சரியானது இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்
'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுக்கும் (நிலை ஏற்படும்)வரை மக்களுடன் போர் புரியும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். யார் இவற்றை செய்கிறாரோ அவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காப்பாற்றிக் கொள்வார்; நியாயமான காரணம் இருந்தால் தவிர. அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பாகும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நான் நபியவர்களிடம் இவ்வாறு கேட்டேன் : நான் நிராகரிப்பாளர்களில் ஒருவரைச் சந்தித்து, நாமிருவரும் சண்டையிட்டு, அவன் எனது ஒரு கையை வாளால் வெட்டிவிட்டான். பின்பு அவன் ஒரு மரத்தில் ஏறி தன்னைக் காத்துக்கொண்டு, 'நான் இஸ்லாத்தை ஏற்றுவிட்டேன்' என்று கூறுகின்றான். அல்லாஹ்வின் தூதரே! அவன் இவ்வாறு கூறிய பின்னர் நான் அவனைக் கொலை செய்யலாமா?' அதற்கு நபியவர்கள், 'அவரைக் கொலைசெய்யாதீர்கள்' என்று கூறினார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது ஒரு கையை வெட்டினான். வெட்டிய பின்பு தான் அவ்வாறு கூறினான்.' என்று கேட்டபோது, 'அவரைக் கொலைசெய்யாதீர். அவ்வாறு நீங்கள் அவரைக் கொலைசெய்தால், கொலைசெய்ய முன்னர் நீர் இருந்த தரத்தில் அவரும், அவர் கூறிய அவ்வார்த்தையைக் கூற முன்னர் அவர் இருந்த தரத்தில் நீங்களும் இருப்பீர்கள்.' என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் ஜாஹிலிய்யாக்காலத்தில் -அறியாமைக்காலத்தில்- இனபந்துக்களை பேணிநடப்பவராகவும், ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தார் இவை அவருக்கு மறுமையில் பயன் அளிக்குமா? என நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள் :அவை அவருக்கு எவ்விதப் பயனையும் அளிக்காது ஏனெனில் அவர் 'எனது இரட்சகனே எனக்கு எனது குற்றத்தை மறுமை நாளில் மன்னித்தருள்வாயாக என்று ஒரு நாளாவாது அவர் கூறவில்லை. என்று பதிலளித்தார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
யாராவது ஒரு மனிதர் தனது சகோதரனைப் பார்த்து, 'காபிரே!' (நிராகரிப்பாளனே!) என்று கூறினால், அவ்விருவரில் ஒருவருக்கு அது கிடைக்கவே செய்யும். அம்மனிதன் அவர் கூறியது போன்றே இருந்தால், அது அவரைச் சேரும். அவ்வாறில்லாவிட்டால், கூறியவரை நோக்கி அது மீண்டுவிடும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும் ஃபஜ்ரும் (ஸுப்ஹ்) ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறி வார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். நான் தொழுகைக்கு (பாங்கும்) இகாமத்(தும்) சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு பணித்துவிட்டுப் பிறகு என்னுடன் விறகுக் கட்டைகள் சுமந்த சிலரை அழைத்துக்கொண்டு, கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என மனம் நாடுகிறது' எனக் கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.