Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 8 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
யார் அமானிதத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றாரோ, அவர் எம்மைச் சார்ந்தவர் அல்ல.
சரியானது இமாம்களான அபூ தாவுத், அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
'யா அல்லாஹ்! எனது மண்ணறையை (சமாதியை) வணங்கப்படும் சிலையாக ஆக்கி விடாதே! தமது நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ் தளங்களாக ஆக்கிக் கொண்ட கூட்டத்தின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக'.
சரியானது இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்
எமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) இடையில் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்'
சரியானது இமாம்களான திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது
(தீய சகுணம்) பறவை சகுணம் இணைவைப்பாகும், தீய சகுணம் இணைவைப்பாகும், தீய சகுணம் இணைவைப்பாகும், என மூன்று தடைவகள் கூறினார்கள். எங்களில் இது குறித்த எண்ணம் உடையவர் எவரும் இல்லாமல் இல்லை. எனறாலும்; இதனை அல்லாஹ் தவக்குளின் மூலம் அகற்றி விடுகிறான்.
சரியானது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
'அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்தவர் நிராகரித்து விட்டார், அல்லது இணைவைத்து விட்டார்'.
சரியானது இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
'நட்சத்திர ஜோதிடக் கலையில் ஒரு பகுதியைக் கற்பவன் சூனியக் கலையில் ஒரு பகுதியைக் கற்றவனாவான், அது அதிகரிக்க இதுவும் அதிகரிக்கும்'.
சரியானது இமாம்களான அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
'உங்களிடம் நான் மிக அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பாகும், அல்லாஹ்வின் தூதரே சிறிய இணைவைப்பு என்றால் என்ன? என ஸஹாபாகக்கள் வினவிய போது முகஸ்துதி எனக் கூறினார்கள். மறுமை நாளில் மக்களுக்கு தங்களின் அமல்களுக்கு அல்லாஹ் கூலி வழங்குகையில் முகஸ்துதியாளர்களைப் பார்த்து ' உலகில் யாருக்கு காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள், அவர்களிடம் ஏதும் வெகுமதி உள்ளதா என்பதை பாருங்கள் என்று கூறிவிடுவான்'
நம்பகமானது (ஹஸன்) இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்
நான் நபியவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். ஒரு நாள், நாம் பயணித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு சமீபமாகச் சென்றுவிட்டேன். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய தூதரே! என்னை நரகை விட்டுத் தூரப்படுத்தி, சுவனத்தில் நுழைய வைக்கும் ஒரு அமலை எனக்குக் காட்டித் தாருங்கள்' எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள், 'நீங்கள் மிக முக்கியமான ஒன்றைப் பற்றிக் கேட்டுவிட்டீர்கள். இதை யாருக்கெல்லாம் அல்லாஹ் இலகுபடுத்திக் கொடுக்கின்றானோ, அது அவர்களுக்க இலகுவாக இருக்கும். நீங்கள் அல்லாஹ்வை -அவனுக்கு எந்த இணையும் கற்பிக்காத நிலையில் - வணங்க வேண்டும். மேலும், தொழுகையையும் நிலைநாட்ட வேண்டும். ஸகாத்தைக்கொடுக்கவேண்டும். ரமழானில் நோன்பு நோற்கவேண்டும். கஃபாவை ஹஜ் செய்யவேண்டும்.' என்று கூறிவிட்டு, 'நன்மையின் வாயில்களை உனக்கு அறிவித்துத் தரட்டுமா? நோன்பு ஒரு கேடயம். நீர் நெருப்பை அனைப்பது போன்று, தர்மம் பாவங்களை அனைத்துவிடும். ஒரு மனிதன் நடு இரவில் தொழவதும் (நன்மையின் ஒரு வாயிலாகும்.) பின்பு "அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து விலகிவிடும்; அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும், ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களின் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது." என்ற வசனத்தை ஓதினார்கள். பின்பு நபியவர்கள், 'ஒரு விடயத்தின் தலையான அம்சத்தையும், அதன் பிரதான தூணையும், அதன் உயர்நிலையையும் உனக்குக் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம்! அல்லாஹ்வுடைய தூதரே!' எனக் கூறியபோது, 'தலையான அம்சம் இஸ்லாமாகும். அதன் பிரதான தூண் தொழுகையாகும். அதன் உயர்நிலை ஜிஹாதாகும்.' என்று கூறிவிட்டு, 'அவை அனைத்தையும் பாதுகாத்துத் தரும் ஒன்றைக் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு நான், ஆம்! அல்லாஹ்வுடைய நபியே! எனக் கூறியதும், தமது நாவைப் பிடித்து, 'இதைத் தடுத்துக்கொள்' என்று கூறினார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய நபியே! நாம் பேசுவதற்கெல்லாம் குற்றம் பிடிக்கப்படுவோமா?' எனக் கேட்டபோது, 'உன் தாய் உன்னை இழக்கட்டும். முஆதே! மக்களை நரகில் முகங்குப்புற எறிந்து விடுவது, அவர்களது நாவின் அறுவடைகளைத் தவிர வேறென்ன இருக்கமுடியும்?'
ஒட்டுமொத்த வழிகள் ஊடாக சரியாகியது (ஸஹீஹ்) இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது