Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 11 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'நாங்கள் முழு நிலவுள்ள-பௌர்னமி- இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு சந்திரனை நோக்கி 'இந்த சந்திரனை நீங்கள் தடங்கலின்றி (தெளிவாக கஷ்டமின்றி) காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப் படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!' என்று கூறினார்கள்'. பின்னர் நபியவர்கள் (வஸப்பிஹ் பிஹம்திரப்பிக) என்ற வசனத்தை ஓதினார்கள்' பொருள் : சூரிய உதயத்திற்கு முன்னறும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் உனது இரட்சனின் புகழைக் கொண்டு துதிப்பீராக'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
தங்கம் மற்றும் வெள்ளியை வைத்துக் கொண்டிருக்கும் யாராக இருப்பினும், அதில் நிறைவேற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றா விட்டால், நெருப்பினால் ஆன இரும்புப் பாளங்கள் அவருக்காக உருவாக்கப்பட்டு, அவை நரக நெருப்பில் சூடு காட்டப்படும். பின்பு, அதைக் கொண்டு அவரது விலாப்புறத்திலும், நெற்றியிலும், முதுகிலும் சூடு போடப்படும். சூடு தனியும் போதெல்லாம் மீண்டும் சூடு போடப்படும். ஐம்பதாயிரம் வருட அளவைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும், அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கப்படும் வரை இவ்வாறு செய்யப்படும். அதன் பின்னர் தான், தனது பாதை ஒன்றில் சுவர்க்கம் என்றோ, நரகம் என்றோ கண்டுகொள்வார்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் 'வங்குரோத்துக்காரன் 'முப்லிஸ்' என்றால் யார் தெரியுமா?.' என்று கேட்டார்கள்?. அதற்கு தோழர்கள் 'திர்ஹமோ, சொத்துக்களோ இல்லாதவன்' என்று பதில் அளித்தார்கள், அப்போது நபியவர்கள்; 'எனது உம்மத்தில் வங்குரோத்துக்காரன் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வருவான், அவனோ ஒருவனுக்கு ஏசியவனாக, இட்டுக் கட்டியவனாக, ஒருவனின் சொத்தை அநியாயமாக சாப்பிட்டவனாக, ஒருவனின் இரத்தத்தை ஓட்டியவனாக, ஒருவனுக்கு அடித்தவனாக வருவான்,, அப்போது பாதிக்கப் பட்டவனுக்கு அநியாயம் இழைத்தவனின் நன்மைகள் பங்கு வைக்கப்படும், நன்மைகள் முடியும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவனின் தீமைகளை எடுத்து அநியாயம் இழைத்தவனின் மீது சுமத்தப்பட்டு, பின்பு அநியாயம் இழைத்தவன் (தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வந்தவன்) நரகில் வீசப்படுவான். (முஸ்லிம்)
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்