Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 5 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, 'அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் நிகழாது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள்.(ஆனால்,இந்நிகழ்வுக்கு முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது 'இறைநம்பிக்கை கொண்டிருந்தும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் நம்பிக்கை கொள்வது பயனளிக்காது.' (அன்ஆம் :158) இரண்டு பேர் (விற்பனைக்காத்) துணிகளை விரித்து(ப் பார்த்து)க் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள்; சுருட்டிக்கூட வைத்திருக்க மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். மேலும், ஒருவர் மடிகனத்த தம் ஒட்டகத்தி(ல் பால் கறந்து அப்போது தா)ன் பாலுடன் (வீடு) திரும்பியிருப்பார்; இன்னும் அதைப் பருகிக் கூட இருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். ஒருவர் தம் நீர் தொட்டியை (அப்போதுதான்) கல்வைத்துப் பூசியிருப்பார்; இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். உங்களில் ஒருவர் தம் உணவை (அப்போதுதான்) வாயருகில் கொண்டு சென்றிருப்பார்; அதை உண்டிருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் நிகழாது. அந்த யுத்தத்தின் போது 'முஸ்லிமே! இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான் என்று கற் பாறைகள் அழைத்து அவனை கொள்ளுமாறு கூறும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'காலம் சுருங்காத வரையில் –காலத்தின் பரக்கத் எடுக்கப்படாத வரை- மறுமை நாள் ஏற்படமாட்டாது. அவ்வேளை வருடம் மாதம் போன்றும் மாதம் வாரம் போன்றும், வாரம் நாள் போன்றும், நாள் மணித்தியாலம் போன்றும், மணித்தியாலம் ஈத்தம் ஓலை விரைவாக எரிந்துவிடுவதைப் போன்றும் இருக்கும்.
சரியானது இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்