Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 21 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர எதனையும் அவன் ஏற்கமாட்டான். அல்லாஹ் தூதர்களுக்கு ஏவியதையே விசுவாசிகளுக்கும் ஏவினான். "தூதர்களே! நல்லவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள், இன்னும், நற்செயலைச் செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்" (ஸூரா முஃமினூன் : 51), மேலும் கூறுகின்றான் "நம்பிக்கைக் கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு - (வணக்கத்திற்குரியவனான) அவனையே வணங்குபவர்களாக இருந்தால் - நீங்கள் நன்றி செலுத்துங்கள்." (ஸூரா அல் பகரா : 172) பின்பு நபியவர்கள் ஒரு மனிதனைப் பற்றிக் கூறினார்கள். அவன் நீண்ட ஒரு பயணத்தில், பரட்டைத் தலையுடன், புழுதி படிந்த நிலையில், தனது இரு கைகளையும் உயர்த்தி, 'யா ரப்பு! யா ரப்பு!' எனப் பிரார்த்திக்கின்றான். ஆனால், அவனது உணவு ஹராமானது, அவனது குடிபானமும் ஹராமானது, அவனது ஆடையும் ஹராமானது, அவன் ஹராமினாலே உணவு ஊட்டப்பட்டுள்ளான். அவனுக்கு எவ்வாறு பதிலளிக்கப்படும்!'
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'நிச்சயமாக அல்லாஹ் அநியாக்காரனுக்கு அவகாசம் வழங்கிக்கொண்டிருப்பான், ஆனால் அவனை தண்டிக்க ஆரம்பித்துவிட்டால் அவனை விடவும் மாட்டான்' என்று நபியவர்கள் கூறிவிட்டு, ஸூறா ஹூதின் 102 ம்; வசனத்தை ஒதினார்கள். ''மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய கிராமங்களை உம் இரட்சகன்; தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அவனது பிடி –தண்டனை- வேதனை மிக்கதாகவும்; மிகக் கடினாமானதாகவும் இருக்கும்''
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
ஓர் அடியான் இன்னோர் அடியானின் குறையை மறைத்தால், அல்லாஹ் மறுமையில் அவரின் குறையை மறைப்பான்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி நினைக்கும் இடத்தில் நான் உள்ளேன். அவன் என்னை நினைவுபடுத்தும் போது நான் அவனோடு உள்ளேன். அவன் தனக்குள் என்னை நினைவு படுத்தினால், நான் எனக்குள் அவனை நினைவு படுத்துவேன். அவன் ஒரு கூட்டத்தில் என்னை நினைவுபடுத்தினால், அவர்களை விடச் சிறந்த ஒரு கூட்டத்தில் அவனை நான் நினைவு படுத்துவேன். அவன் என்னை ஒரு சாண் நெருங்கி வந்தால், நான் அவனை ஒரு முழம் நெருங்குவேன். அவன் என்னை ஒரு முழம் நெருங்கிவந்தால், நான் அவனை ஒரு பாகம் நெருங்கிவருவேன். அவன் என்னிடம் நடந்துவந்தால், நான் அவனிடம் விரைந்து வருவேன்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது எம்முடைய இரட்சகன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி , 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.