Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 18 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'' நீங்கள் கப்ருகளின் -மண்ணறைகளின்- மீது உட்காரவும் வேண்டாம் அதனை முன்னோக்கித் தொழவும் வேண்டாம்''.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தம் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும் போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தார்கள். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!' எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பின்னால் 'உஃபைர்' என்று அழைக்கப்படும் கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், 'முஆதே! அல்லாஹ்வுக்கு அடியார்கள் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை நீர் அறிவீரா? மேலும் அடியார்களுக்கு அல்லாஹ் ஆற்ற வேண்டிய கடமை யாது என்பதையும் நீர் அறிவீரா என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்' என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ' அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமை என்னவென்றால், அவர்கள் அவனை மாத்திரமே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. அல்லாஹ்வின் மீது அடியார்களுக்கு உள்ள உரிமை –கடமை யாதெனில், அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இருப்பவரை (மறுமையில்) அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும்' என்று கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! இந்த நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், 'மக்களுக்கு இந்த நற்செய்தியை (இப்போது) அறிவிக்காதீர்;. அவர்கள் இந்தச் செய்தியை மட்டுமே சார்ந்து (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள்' என்று பதில் அளித்தார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்து விடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (இரகசியமான விடயம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அலீ இப்னு அபீதாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் (மண்ணறையையும்) தரையுடன் சமப்படுத்தாது விட்டு விடாதீர்!' என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
"(தாகூத்கள்") சிலைகள் மீதோ உங்களின் பெற்றோர்களின் மீதோ நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாம்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பயணம் ஒன்றில் அவர்களுடன் அபூபஷீர் அல் அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, 'எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) நாண்போன்ற மாலையோ அல்லது வேறு ஏதாவது ஒரு மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்'' எனக் கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அபீ ஸீனியாவில் தாம் கண்ட தேவாலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் தெரிவித்தார்கள். அந்த தேவாலயம் 'மாரியா' என்று சொல்லப்படுகிறது. அதில் கண்ட உருவங்களையும் உம்மு ஸலமா (ரழி) குறிப்பிட்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்'அவர்களில் நல்லடியான் அல்லது நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். அவர்கள்தான்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிகவும் தீயவர்களாவர்;'என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.