Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 12 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) அளவு கடந்து புகழ்ந்ததை போன்று என்னை நீங்கள் அளவு கடந்து புகழ வேண்டாம், நான் அல்லாஹ்வின் அடியானாவேன், எனவே அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றே கூறுங்கள்'.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
நாய் மற்றும் உருவமிருக்கும் வீட்டில் மலக்குமார்கள் பிரவேசிக்க மாட்டார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிக்கட்டும். அவர்கள் தமது நபிமார்களின் மண்ணறைகளை தொழுமிடங்களாக மாற்றிக் கொண்டார்கள்.' ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : அவ்வாறில்லாவிட்டால் அவர்களது கப்ரும் வெளிக்காட்டப்பட்டிருக்கும். எனினும், அது தொழுமிடமாக மாற்றப்படலாம் எனப் பயப்படப்பட்டது.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
மறுமை நாளில் நரகவாதிகளுள் ஆகக் குறைந்த வேதனையை அனுபவிக்கும் ஒருவனிடம் : பூமியில் உனக்கு சொந்தமாக ஏதாவது இருந்தால் அதனை பிணையாக- இழப்பீடாக- வழங்கி இந்த வேதனையிலிருந்து விடுதலைபெற முயற்சிப்பீரா? என்று கேட்பான். அதற்கு அவன் 'ஆம்'; என்று கூறுவான். அப்போது அல்லாஹ் அவனிடம் நீ ஆதத்தின் முதுகுத்தண்டில் இருக்கும் போது, இதனை விடவும் சிறிய ஒரு விடயமான நீ எனக்கு இணைவைக்கக் கூடாது என்பதையே எதிர்பார்த்தேன். ஆனால் அதனை நீ ஏற்றுக் கொள்ளாது எனக்கு நீ இணைவைத்தாய் என்று கூறுவான்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு வார்த்தையை கூற அதற்கு நான் வேறு ஒன்றை கூறினேன். நபியவர்கள் 'அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்'. அப்போது நான் அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்காத நிலையில் மரணித்தவர் சுவர்க்கம் நுழைவார் என்று கூறினேன்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
சில நபர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சோதிடர்கள் குறித்து வினவினர். அதற்கு 'அவர்கள் குறித்து கருத்திற் கொள்ளத் தேவையில்லை' என அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பதிலளித்தார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவ்வாறாயின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)' என்று வினவினர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அந்த உண்மையான வார்த்தைகளை ஜின் (வானவரிடமிருந்து) ஒத்துக்கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பது போல் போட்டு விடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றனர்' என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தம் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும் போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தார்கள். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!' எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பின்னால் 'உஃபைர்' என்று அழைக்கப்படும் கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், 'முஆதே! அல்லாஹ்வுக்கு அடியார்கள் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை நீர் அறிவீரா? மேலும் அடியார்களுக்கு அல்லாஹ் ஆற்ற வேண்டிய கடமை யாது என்பதையும் நீர் அறிவீரா என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்' என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ' அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமை என்னவென்றால், அவர்கள் அவனை மாத்திரமே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. அல்லாஹ்வின் மீது அடியார்களுக்கு உள்ள உரிமை –கடமை யாதெனில், அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இருப்பவரை (மறுமையில்) அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும்' என்று கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! இந்த நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், 'மக்களுக்கு இந்த நற்செய்தியை (இப்போது) அறிவிக்காதீர்;. அவர்கள் இந்தச் செய்தியை மட்டுமே சார்ந்து (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள்' என்று பதில் அளித்தார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.