Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 2 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

அறிவிப்பாளர்

'நான் ஒரு பயணத்தின்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (வுழூச் செய்தபோது) அவர்களின் இரண்டு காலுறைகளையும் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அதைவிட்டுவிடுவீராக, கால்கள் இரண்டும் வுழூவுடன் இருக்கும் நிலையில்தான் காலுறைகளை அணிந்தேன்' என்று கூறிவிட்டு அவ்விரு காலுறைகளின் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் ஒரு கூட்டத்தினரால் மண் மற்றும் குப்பை கூலங்கள் வீசப்படும் இடத்திற்குச் சென்று நின்ற நிலையில் சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவரைவிட்டு ஓதுங்கிச் சென்றேன். அப்பொழுது தன்னிடம் நெறுங்கி நிற்குமாறு நபியவர்கள் என்னைப் பணித்தார்கள். நான் அவர்களை நெருங்கி அவர்களது இரு குதிகால்களிடத்தில் நின்று (அவர்களை மறைத்துக் கொண்டேன்.) அவரகள் வுழூ செய்து தனது இரு ( خف குப்பு) காலுறைகளின் மீது தண்ணீரினால் (மஸ்ஹு) தடவிக் கொணடார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.