Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 33 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
''எனது சமூகத்தின் இறுதியில் சில நபர்கள் தோன்றுவார்கள் அவர்கள் நீங்களோ உங்களின் மூதாதையர்களோ செவிமடுக்காத விடயங்களை (மார்க்கத்தின் பெயரால்) கூறுவார்கள். எனவே உங்களையும் அவர்களையும் நான் எச்சரிக்கிறேன்''.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப்போகிறேன்; வேறெந்த இறைத்தூதரும் அதைத் தம் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம், நரகம் போன்றவற்றைக் கொண்டுவருவான். அவன் எதைச் சொர்க்கம் என்று கூறுகின்றானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்துத் தம் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும் போது, அவர், அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படுபவன் வேறு எவருமில்லை முஹம்மத் -ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்- அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று உறுதிமொழி கூறுவார். இதுதான், (இறை)நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ்; இம்மையிலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச்செய்வான் ' எனும் (14:27ஆவது) இறைவசனத்தின் கருத்தாகும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு 'நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?' என்று கேட்பான்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
தொழுகை அறிவிப்பாளரின் (முஅத்தின்) அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் 'வங்குரோத்துக்காரன் 'முப்லிஸ்' என்றால் யார் தெரியுமா?.' என்று கேட்டார்கள்?. அதற்கு தோழர்கள் 'திர்ஹமோ, சொத்துக்களோ இல்லாதவன்' என்று பதில் அளித்தார்கள், அப்போது நபியவர்கள்; 'எனது உம்மத்தில் வங்குரோத்துக்காரன் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வருவான், அவனோ ஒருவனுக்கு ஏசியவனாக, இட்டுக் கட்டியவனாக, ஒருவனின் சொத்தை அநியாயமாக சாப்பிட்டவனாக, ஒருவனின் இரத்தத்தை ஓட்டியவனாக, ஒருவனுக்கு அடித்தவனாக வருவான்,, அப்போது பாதிக்கப் பட்டவனுக்கு அநியாயம் இழைத்தவனின் நன்மைகள் பங்கு வைக்கப்படும், நன்மைகள் முடியும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவனின் தீமைகளை எடுத்து அநியாயம் இழைத்தவனின் மீது சுமத்தப்பட்டு, பின்பு அநியாயம் இழைத்தவன் (தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வந்தவன்) நரகில் வீசப்படுவான். (முஸ்லிம்)
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
('அல்கவ்ஸர்'எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது.அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது.அதன் கூசாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.