Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 27 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
(மறுமை நாளில்) உங்களில் எனது தடாகத்திற்கு நீர் அருந்த வருவோரை எதிர்பார்த்திருப்பேன்.அப்போது சிலர் என்னிடம் வராது (அல்கவ்ஸர் தடாகத்தை விட்டு) தடுக்கப்படுவார்கள்;. உடனே நான் இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பேன். அதற்கு உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் உங்கள் மரணத்திற்குப் பின் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள் என்று கூறப்படும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
எமக்கு அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் . ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! (திருக்குர்ஆன் 25:43 வது இறைவசனத்தின்படி மறுமை நாளில்) இறைமறுப்பாளன் தன்னுடைய முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவது எப்படி?' என்று கேட்டார். நபியவர்கள் 'இம்மையில் அவனை இரண்டு கால்களால் நடக்கச் செய்த (இறை)வனுக்கு, மறுமைநாளில் அவனை அவனுடைய முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.(இதை அறிவித்த) கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்கள் 'ஆம். (முடியும்). எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக!'' என்றார்கள்
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது; 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை, அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை, மற்றொருவர் புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான ஈத்த மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை நட்டினார்கள். அது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்டபோது, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் காலமெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
மறுமை நாளில் (மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, 'அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
“இறைநம்பிக்கையாளர் அவருடைய இறைவனுக்கருகில் கொண்டுவரப்படுவார். அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்ள வைப்பான். (அவரிடத்தில் இறைவன்), “நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா” என்(று கேட்)பான். அவர், “(ஆம்) அறிவேன். என் இறைவா!” என்று கூறுவார். அப்போது இறைவன், “இவற்றை யெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்காக அவற்றை மன்னித்து விடுகின்றேன்” என்று கூறுவான். பிறகு அவரது நற்செயல்களின் பதிவேடு (அவரிடத்தில் வழங்கப்பட்டுச்) சுருட் டப்படும். நயவஞ்சகர்களும் இறைமறுப்பாளர்களும் சாட்சியாளர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு, “இவர்கள்தான், தம் இறைவன்மீது பொய் யைப் புனைந்துரைத்தவர்கள்” என அறிவிக்கப்படும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது மடங்குகளில் ஒன்றாகும்;. என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமானதாயிற்றே'' என்று கேட்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள்,'(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்' என்றார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்? என்று (திருப்பிக்) கேட்டார்கள். அம்மனிதர், 'எதுவுமில்லை'. எனினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) நீ இருப்பாய்' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்' என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரழி) அவர்களையும் உமர் (ரழி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன்தான் இருப்பேன் என்று நான் நம்புகிறேன். அவர்களுடைய நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.