Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 1 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

பதிவாகிய நூல்

அறிவிப்பாளர்

வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரு மொழியில் ஓதி, அதை முஸ்லிம்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், ('வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்:( நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும்இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோருக்கும், யஃகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்'' என்று கூறினார்கள்.'(அல்பகரா (136) வசனம்
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்