Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 53 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
“இயன்றவரை சரியான அமல்களையே செய்யுங்கள். உங்களில் யாரும் தனது அமல்களால் மாத்திரம் தப்பிக்கமுடியாது என்பதை அறிந்துகொள்ளுங்கள்” அப்போது நபித்தோழர்கள், “நீங்களுமா? அல்லாஹ்வின் தூதரே” எனக் கேட்டபோது, “நானும் தான். அல்லாஹ் தனது அருளாலும், பேருபகாரத்தாலும் என்னை மறைத்துக் கொண்டாலே தவிர (என்னாலும் தப்பமுடியாது)” என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நான் அல்லாஹ்வின் தூதரிடம் : அல்லாஹ்வின் தூதரே தங்களுக்குப் பிறகு இஸ்லாத்தைப் பற்றி எவரிடமும் கேட்டகத் தேவையில்லாத அளவு எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டேன் எனக் கூறி அதிலேயே உறுதியாக நிலைத்திருப்பீராக எனக் கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'தூய்மையும்; உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களைவிட்டும் இணை கற்பித்தலைவிட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
மறுமை நாளில் நரகவாதிகளுள் ஆகக் குறைந்த வேதனையை அனுபவிக்கும் ஒருவனிடம் : பூமியில் உனக்கு சொந்தமாக ஏதாவது இருந்தால் அதனை பிணையாக- இழப்பீடாக- வழங்கி இந்த வேதனையிலிருந்து விடுதலைபெற முயற்சிப்பீரா? என்று கேட்பான். அதற்கு அவன் 'ஆம்'; என்று கூறுவான். அப்போது அல்லாஹ் அவனிடம் நீ ஆதத்தின் முதுகுத்தண்டில் இருக்கும் போது, இதனை விடவும் சிறிய ஒரு விடயமான நீ எனக்கு இணைவைக்கக் கூடாது என்பதையே எதிர்பார்த்தேன். ஆனால் அதனை நீ ஏற்றுக் கொள்ளாது எனக்கு நீ இணைவைத்தாய் என்று கூறுவான்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு வார்த்தையை கூற அதற்கு நான் வேறு ஒன்றை கூறினேன். நபியவர்கள் 'அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்'. அப்போது நான் அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்காத நிலையில் மரணித்தவர் சுவர்க்கம் நுழைவார் என்று கூறினேன்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'நிச்சயமாக அல்லாஹ் உங்களது தோற்றங்களையோ, செல்வங்களையோ பார்க்க மாட்டான், இருப்பினும் உங்களது உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கின்றான்.'
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
(மறுமையில்) உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார்." நீங்கள் உங்கள் வலப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் இடப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் முன்னால் பார்ப்பீர்கள். உங்கள் முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். ஆகவே, ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'இரக்கமுள்ளவர்களுக்கு அர்ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்'.
சரியானது இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது