Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 3 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்; : 'ஆதமின் மகனே, நீ என்னிடம் பிரார்த்தித்து, என்மீது எதிர்பார்ப்பு வைத்திருக்கும் காலமெல்லாம் நீ செய்தவற்றை பொருட்படுத்தாது அதுவரை நீ எந்த நிலையில் இருப்பினும் நான் உன்னை மன்னித்துக் கொண்டிருப்பேன். ஆதமின் மகனே, உன்னுடைய பாவங்கள் வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டாலும் பின், நீ என்னிடம் மீண்டு மன்னிப்புக் கோருவாயானால், நீ செய்தவற்றை பொருட்படுத்தாது நான் உன்னை மன்னிக்கவே செய்வேன். ஆதமின் மகனே, நீ பூமியை நிறைத்திடும் அளவிற்கு பாவங்கள் செய்து விட்ட பிறகும் கூட, எனக்கு இணை வைக்காத நிலையில் என்னை சந்தித்தால் அதே அளவுக்கு பாவமன்னிப்பை உனக்கு வழங்குவேன் .
நம்பகமானது (ஹஸன்) இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது : ''அஊது பில்லாஹில் அழீம் வபிவஜ்ஹிஹில் கரீம் வஸுல்தானிஹில் கதீம் மினஷ் ஷைய்தானிர் ரஜீம்'' என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்;. இதனை நபியவர்கள் கூறினார்களா? என்று கேட்டதற்கு ஆம் என்று நான் கூறினேன். இந்தப் பிரார்த்தனையை கூறினால் இந்நாள் முழுவதும் என்னிடமிருந்து பாதுகாப்புப் பெறுகிறான் என்று ஷைத்தான் கூறுகிறான். திக்ரின் பொருள் : மகத்துவம் கொண்ட அல்லாஹ்வைக் கொண்டும், அவனது அழகிய திருமுகத்தைக் கொண்டும்,நிலையான மேலாதிக்கத்தைக் கொண்டும், விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
நம்பகமானது (ஹஸன்) இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்
'நிச்சயமாக அல்லாஹ் என் சமூகத்தாரிடத்தில்; தவறுதலாக ஏற்படக் கூடியதையும் மறதியாக ஏற்படக்கூடியதையும் இன்னும் நிர்பந்தமாக நிகழக்கூடிவற்றையும் எனக்காக மன்னித்து விடுகிறான்'.
இது நம்பகமானது (ஹஸன்) என இமாம் நவவி கூறிியுள்ளார். இதனை இமாம்களான இப்னுமாஜா, பைஹகீ போன்றோர் அறிவித்துள்ளனர்.