Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 2 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

பதிவாகிய நூல்

அறிவிப்பாளர்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்ஸாரிப் பெண் ஒருவரை விழித்து -இப்பெண்ணின் பெயரை இப்னு அப்பாஸ் கூறினார்கள் ஆனால் நான் அவளுடைய பெயரை மறந்துவிட்டேன்.- 'எம்முடன் ஹஜ்ஜு செய்வதற்கு வருவதை உம்மை எது தடுத்தது?' என வினவியதற்கு அந்தப் பெண்மணி எம்மிடம் நீர் இரைக்கும் இரு ஒட்டகங்கள்தானிருந்தன. அவைகளில் ஒன்றில் தன் கணவரும் மகனும் ஹஜ்ஜுக்கு சென்றுவிட்டனர். மற்றதை நாம் நீர் இரைப்பதற்காக விட்டுச் சென்றனர் என்று கூறினாள். அப்பொழுது இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: ரமழான் மாதம் வந்துவிட்டால் நீங்கள் உம்ராவை நிறை வேற்றுவாயாக ! ஏனெனில் அம்மாதத்தில் நிறை வேற்றப்படும் உம்ரா வணக்கம் ஹஜ்ஜு வணக்கத்துக்கு நிகராகும் என்று கூறினார்கள்
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'உடலுறவில் ஈடுபடாமல், பாவங்கள் செய்யாமல் ஹஜ் செய்தவர் தனது தாய் அன்று ஈண்டெடுத்த பாலகன் போன்று திரும்புவார்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.