Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 96 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஷைத்தான் எனக்கும், எனது தொழுகைக்குமிடையில் குறுக்கிட்டு எனது ஓதலை குழப்புகிறான் என்று கூறிய போது, நபியவர்கள்; "அவன்தான் ஹின்ஸப் எனப்படும் ஷைத்தான், அவன் குழப்புவதை நீர் உணர்ந்தால் அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிவிட்டு, உமது இடது பக்கத்தில் மூன்று விடுத்தம் துப்பிவிடு' என்று கூற, நான் அவ்வாறே செய்தேன், அல்லாஹ் அவனை விட்டும் என்னை காப்பாற்றி விட்டான் என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அல்லாஹ் கூறுகின்றான் : ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். (ஏனெனில்) அவன் காலத்திற்கு ஏசுகின்றான். நானே காலமாக இருக்கின்றேன். அதிகாரம் என்னிடமே உள்ளது. இரவையும் பகலையும் நானே மாறச் செய்கின்றேன்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
யாரிடம் மென்மை இல்லையோ அவர் அதன் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுவார்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! சுவர்கத்தையும் நரகத்தையும் விதியாக்கும் இரு விடயங்கள் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் யார் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காது மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். யார் அல்லாஹ்வுக்கு ஏதாவது ஒன்றை இணைவைத்தவராக மரணிக்கிறாரோ அவர் நரகம் நுழைவார் என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
உறவை துண்டித்து நடப்பவன் சுவனம் நுழைய மாட்டான்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'(கணவனை இழந்த) விதவைக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
(ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (எங்களிடம்), 'புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், 'இது குறித்து அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று பதிலளித்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்' என்று பதிலளித்தார்கள். அப்போது, 'நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், 'நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசிவிட்டீர். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டால், நீர் அவரைப் பற்றி அவதூறு கூறிவிட்டீர் என்றார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'மென்மை எதில் இருக்கிறதோ, அவற்றை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்