Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 3 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
Filter
Pick a property to filter by
الفئة المستهدفة1
حجم المحتوى1
التخريج المتعدد5
التخريج المتعدد: مسلم

பதிவாகிய நூல்

அறிவிப்பாளர்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை' என்று கூறி, வீட்டிலேயே தொழுது கொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, 'தொழுகை அறிவிப்பு சப்தம் (அதான்) உமக்குக் கேட்கிறதா?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம்' (கேட்கிறது) என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!' (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
التصنيف الشرعيالأذان والإقامة، فضل صلاة الجماعة وأحكامها، صلاة أهل الأعذارموضوعات الحديثأحكام الأذان والإقامة، صلاة الجماعة، صلاة أهل الأعذار
அல்லாஹ் உங்களது தவறுகளை அழித்து, அந்தஸ்த்துக்களை உயர்த்தக்கூடிய ஒரு விடயத்தை காட்டித் தரட்டுமா? என நபியவர்கள் கேட்டதற்கு,ஸஹாபாக்கள்: ஆம் யாரஸுலல்லாஹ் என்றார்கள். அதற்கு நபியவர்கள்: சிரமமான நிலையிலும் வுழுவை நிரப்பமாக செய்தல், பள்ளிவாயிலுக்கு அதிகம் நடந்து செல்லுதல், ஒரு தொழுகைக்குப் பின்னர் இன்னோர் தொழுகையை எதிர்பார்த்திருத்தல் என்பனதான் அவை. உண்மையில் அவை அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதாகும்.'
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
التصنيف الشرعيفضائل الأعمال الصالحة، فضل الوضوء، سنن وآداب الوضوء، وجوب الصلاة وفضلها وحكم تاركها، فضل صلاة الجماعة وأحكامها، أحكام المساجدموضوعات الحديثأحكام المساجد غير الحرمين، أحكام الوضوء، مكانة الصلاة وفضلها، صلاة الجماعة
'தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும். பெண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது அவற்றில் கடைசி ஸஃப்பாகும். அவைகளில் கெட்டது ஆரம்ப ஸஃப்பாகும்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
التصنيف الشرعيفضل صلاة الجماعة وأحكامها