Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 12 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் காணவில்லை. அவர்களை நான் தேடியபோது எனது கை அவர்களது உட்கால்ப் பாதங்களைத் தொட்டது. அவை நட்டிவைக்கப் பட்டிருந்தன. அவர்கள் பள்ளிவாசலில் இருந்தார்கள். அவர்கள் இவ்வாறு கூறிக் கொண்டிருந்தார்கள்: யா அல்லாஹ்! உன் திருப்தியைக் கொண்டு உனது கோபத்தை விட்டும், உன்னிடமுள்ள ஈடேற்றத்தைக் கொண்டு உன் தண்டனையை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். உன்னைக் கொண்டே, உன்னை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். நீ உன்னைப் புகழ்ந்தது போல, என்னால் உன்னைப் புகழ்ந்து முடிக்க முடியாது.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ழான தொழுகை முடிந்ததும் பின்வருமாரு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லிஷைஇன் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதய்த்த, வலா முஃதிய லிமா மனஃத்த, வலா யன்ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து .(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவராலும் கொடுக்கவும் முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் உன்னிடம் பயன் அளிக்காது)
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையில் 'அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஆபினீ வஹ்தினீ வர்ஸுக்னீ' என்று கூறுபவர்களாக இருந்தார்கள்;. பொருள் : யாஅல்லாஹ் ! என்னை மன்னித்து விடுவாயாக, எனக்குக் கிருபை செய்வாயாக ,எனக்கு ஆரோக்கியத்தைத் தருவாயாக, எனக்கு நேர்வழி காட்டிடுவாயாக, எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக'.
துணை ஆதாரங்கள் ஊடாக ஆதாரமாகக்கொள்ள முடியுமானது (ஹஸன்) இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னாரி வமின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத், வமின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால்.என்று -இறுதி தஷஹ்ஹுதின் பின் பிரார்திக்கக் கூடியவராக இருந்தார்கள்: பொருள்: இறைவா! நான் உன்னிடம் கப்ரின் வேதனையிலிருந்தும், நரகின்; வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்திலிருந்தும்; பாதுகாப்பு தேடுகிறேன். முஸ்லிமின் அறிவிப்பில் : 'உங்களில் ஒருவர் கடைசி தஷஹ்ஹூதை ஓதி முடித்த பின், நரக வேதனை, கப்ரு வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை, தஜ்ஜால் மூலம் ஏற்படும் தீங்கு ஆகிய நான்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடட்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.