Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 13 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'நெற்றி- இதன் போது தம் கையால் மூக்கையும் அடையாளம் காட்டினார்கள்-, இரண்டு கைகள், இரண்டு முட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகக்ள்; படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) சேர்த்துப் பிடித்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
சில மனிதர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மிம்பர்-பிரசங்க மேடை எதனால் அமைக்கப்பட்டது என்ற வாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து அது பற்றி வினவினர். அதற்கு ஸஹ்ல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த மின்பர் மேடை எதனால் அமைக்கப்பட்டது என்பது குறித்து நான் அறிவேன். அதே போன்று அது வைக்கப்பட்ட முதல் நாளிலேயே நான் அதனைப் பார்த்ததுடன், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதில் அமர்வதை நான் கண்டேன். 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெண்ணிடம் - அன்ஸாரிப் பெண்களில் ஒருவரான ஸஹ்ல் என்ற பெயரால் அழைக்கப்படுகின்ற பெண்ணிடம்- 'தச்சு வேலை செய்யும் உன்னுடைய அடிமையிடம் நான் மக்களுக்கு உரையாற்றும்போது அமர்ந்து கொள்வதற்கேற்ற மேடையைச் செய்து தரச் சொல்' என்று சொல்லி அனுப்பினார்கள். அப்பெண் தம் அடிமையிடம் இதைக் கூறினார். அந்த அடிமை ஃகாபா எனும் பகுதியில் உள்ள மரத்தில் அதைச் செய்து வந்தார். அப்பெண் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு கொடுத்தனுப்பினார். அதை தற்போது இருக்கும் இந்த இடத்தில் வைக்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள், பிறகு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதன் மீது ஏறி அதன் மீது தொழுததையும், அதன் மேல் இருந்தபோது தக்பீர் - ஆரம்ப தக்பீர் - கூறுவதையும் நான் பார்த்தேன்; பின்னர் அவர் அதன் மேல் இருந்தவாறு குனிந்து ருகூஉ செய்தார்கள், பின்னர் அவர்கள் பின்னோக்கி கீழே வந்து, மின்பரின் அடிப்பகுதியில் ஸஜ்தா செய்ததன் பின்னர் அவர்கள் மீண்டும் திரும்பிச் சென்றார்கள். இவ்வாறு அவர்கள் தொழுகையை முடித்ததன் பின் மக்களை முன்னோக்கி: மக்களே! நான் இந்த மிம்பரை செய்தது உங்களுக்கு இமாமத் செய்யவும், எனது தொழுகை முறையை கற்றுத்தரவுமே என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, ரப்பிஃபிர்லீ,' என கூறுபவர்களாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இருந்தார்கள். (பொருள் : எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக, எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக).
சரியானது இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னு மாஜா மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது
'திருடர்களில் மிகவும் மோசமானவர் அவருடைய தொழுகையில் திருடுபவராவார்' அதற்கு நான்; 'அவன் எப்படி தொழுகையை திருடுகிறான்?' எனக் கேட்டேன் அதற்கு அவர்கள்: 'அவர் அதன் ருகூவையோ அல்லது ஸுஜூதையோ சரியாகச் செய்வதில்லை' என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் இப்னு ஹிப்பான் பதிவு செய்துள்ளார்
நீ ஸுஜூது செய்தால் உனது இரு உள்ளங்கைகளையும் நிலத்தில் வைக்கவும். முழங்கைகளை உயர்த்திக் கொள்ளவும்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்