Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 5 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

பதிவாகிய நூல்

உங்களில் ஒருவர் உறங்கும் போது ஷைத்தான் அவரது தலையின் பிடரியில் மூன்று முடிச்சுக்களை இடுவான். ஒவ்வொரு முடிச்சின் போதும், 'உனக்கு நீண்ட இரவு உள்ளது. எனவே உறங்கு' எனக் கூறுவான். அவர் விழித்து, அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஒரு முடிச்சு நீங்கிவிடும். அவர் வுழூ செய்தால் இன்னொரு முடிச்சும் நீங்கிவிடும். அவர் தொழுதுவிட்டால் அடுத்தமுடிச்சும் நீங்கிவிடும். எனவே அவர், சுத்தமான உள்ளத்துடன், உற்சாகமானவராக காலைப்பொழுதை அடைவார். அவ்வாறில்லா விட்டால் கெட்ட உள்ளத்துடன் சோம்பேறியாகக் காலைப் பொழுதை அடைவார்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
' உங்களில் தொடக்கு ஏற்பட்ட ஒருவரின்; தொழுகையை வுழூச் செய்யும் வரையில் அல்லாஹ் ஏற்க மாட்டான்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'உங்களில் ஒருவர் வுழூச் செய்தால் தம் நாசிற்கு தண்ணீர்ச் செலுத்தி பின்னர் அதை சிந்தட்டும். மலசலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் விழித்தெழுந்தால் அவர், தாம் வுழூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்' முஸ்லிமின் அறிவிப்பில்: உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் இரு கைகளையும் கழுவமுன் வுழூ செய்யும் பாத்திரத்தினுள் செலுத்த வேண்டாம். ஏனென்றால் அவரின் இருகைகளும் இரவில் எங்கிருந்தது- எதனைத் தொட்டது- என்பது பற்றி அவர் அறியமாட்டார்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
உங்களில் ஒருவர் தனது உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்தால், மூன்று தடவை மூக்கை சீறிவிடட்டும். ஏனெனில் ஷைத்தான் அவரது மூக்கினுள் இரவில் தரிக்கின்றான்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
ஒரு முஸ்லிமான - அல்லது முஃமினான - ஒரு அடியான் வுழூ செய்யும் விதமாக, முகத்தைக் கழுவினால், அவர் தனது இரு கண்களாலும் பார்த்த அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது முகத்திலிருந்து வெளியேறிவிடும். அவர் தனது இரு கைகளையும் கழுவினால், அவரது இரு கைகளும் பிடித்த அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது இரு கைகளையும் விட்டு வெளியேறிவிடும். அவர் இரு கால்களையும் கழுவினால், அவர் தனது இரு கால்களாலும் நடந்துசென்ற அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - வெளியேறிவிடும். இவ்வாறே அவர் பாவங்களை விட்டும், தூய்மையடைந்த ஒருவராக வெளியேறுவார்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்