Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 16 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

பதிவாகிய நூல்

சுத்தம் ஈமானின் பாதியாகும். 'அல்-ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்பது மீஸானின் நன்மையின் தட்டை நிறைக்கின்றது. 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் குறைகளுக்கு அப்பாற்பட்டவன்) 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அலல்hஹ்வுக்கே) ஆகிய இரண்டுமோ அல்லது ஒவ்வொன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் தெளிவான அத்தாட்சியாகும்;. பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு ஆதாரமாகும். தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மாவை விற்றுவிடுகின்றனர். ஒன்று அதனை விடுதலைபெறச் செய்கின்றனர். அல்லது அதற்கு அழிவைத் தேடித் தருகின்றனர்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். பாதையில் உள்ள ஒரு நீர் நிலைக்கு நாங்கள் வந்து சேர்ந்த போது சிலர் அஸ்ர் தொழுகைக்காக அவசரப்பட்டனர். (அதற்காக) அவசர அவசரமாக வுழு செய்தனர். நாங்கள் அவர்களிடம் போய்ச் சேர்ந்த போது அவர்களுடைய குதிகால்களில் தண்ணீர் படாமல் தெளிவாக அவை காட்சியளித்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான் உண்டு. ஆகவே வுழுவை பரிபூரணமாகச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
உஸ்மான் இப்னு அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அடிமையான ஹும்ரான் அவர்கள் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் வுழு செய்த நிகழ்வை அறிவிக்கிறார்கள்: உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி சிந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் இரு கைகளையும் முழங்கை உட்பட கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு 'நான் வுழூச் செய்வதைப் போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழூச் செய்ததை பார்த்திருக்கிறேன்' என்று கூறிவிட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னிடம், 'யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்' என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
ஒரு முஸ்லிமான - அல்லது முஃமினான - ஒரு அடியான் வுழூ செய்யும் விதமாக, முகத்தைக் கழுவினால், அவர் தனது இரு கண்களாலும் பார்த்த அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது முகத்திலிருந்து வெளியேறிவிடும். அவர் தனது இரு கைகளையும் கழுவினால், அவரது இரு கைகளும் பிடித்த அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது இரு கைகளையும் விட்டு வெளியேறிவிடும். அவர் இரு கால்களையும் கழுவினால், அவர் தனது இரு கால்களாலும் நடந்துசென்ற அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - வெளியேறிவிடும். இவ்வாறே அவர் பாவங்களை விட்டும், தூய்மையடைந்த ஒருவராக வெளியேறுவார்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு 'ஸாஉ' முதல் ஐந்து 'முத்'து வரையிலான தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு 'முத்'து அளவுத் தண்ணீரில் வுழுச் செய்வார்கள்.'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
''அழகிய முறையில் வுழூ செய்பவரின் (சிறு)பாவங்கள் நகங்களின் கீழ் உட்பட உடலின் எல்லாப் பகுதியிலிருந்தும் வெளியேறி விடுகின்றன''.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை இவ்விரு முறை கழுவி வுழு செய்தார்கள்.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
ஒரு முஸ்லிம் அழகிய முறையில் வுழுச் செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் நிச்சயம் கிடைக்கும் என்று கூறுவதை நான் கேட்டேன். உடனே நான் என்ன அருமையான வார்த்தை! என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரழி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரழி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்ததை; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன.அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம்''.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்