Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 7 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
விசுவாசிகளுக்கு - அல்லது என்னுடைய சமுதாயத்திற்கு- சிரமமாக இருக்கும் என்று இல்லையென்றிருந்தால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தியிருப்பேன்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் இரகசியமான வணக்க வழிபாடுகள் குறித்து வினவினார்கள். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்களில் ஒருவர், ''நான் பெண்களைவிட்டு ஒதுங்கி யிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக்கொள்ளமாட்டேன்' என்று கூறினார். இன்னொருவர், ''நான் ஒரு போதும் இறைச்சி சாப்பிடமாட்டேன் ' என்று கூறினார். மூன்றாம் நபர் நான் படுக்கையில் தூங்க மாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வை புகழ்ந்து துதி செய்து விட்டு (அந்தத் தோழர்களிடம்) வந்து, ''இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொள்வதற்கு இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது! (அறிந்து கொள்ளுங்கள்) என்னைப் பொறுத்தவரை நான் (இரவில்) தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன், மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் புறக்கணித்து நடக்கிராரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்' என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நாற்பதாவது வயதில் அல்குர்ஆன் இறக்ககப்பட்டது. அவர்கள் மக்காவில் பதின்மூன்று வருடங்கள் தங்கினார்கள். பின்னர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செல்ல அல்லாஹ்வின் உத்தரவு கிடைக்க மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அங்கே பத்து வருடங்கள் வாழ்ந்து பின்னர் அங்கேயே மரணித்தார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
விசுவாசிகளின் தாயே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பண்பாடுகள் பற்றி எனக்கு அறிவித்துத்தாருங்கள் என்று கேட்டதற்கு ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா 'நீர் அல்குர்ஆனை ஓதுவதில்லையா?' என வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்று கூறினேன். அதற்கு அவர்கள்; 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பண்பாடு அல் குர்ஆனாகவே இருந்தது' என்று கூறினார்கள்.
சரியானது இது இமாம் முஸ்லிம் அவர்களால் ஒரு நீண்ட ஹதீஸின் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது
நபி (ஸல்) அவர்கள், தாம் காலணி அணிந்து கொள்ளும் போதும் தலைவாரிக் கொள்ளும் போதும் சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்து வேலைகளிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற, மேலும், அல்லாஹ்வுடையவும் அவனு டைய தூதருடையவும் நேசத்தைப் பெற்ற ஒரு மனிதரிடம், நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப்போகிறேன். அல்லாஹ் அவருக்கு வெற்றியளிப்பான்' என்று கூறினார்கள். அந்தக் கொடி தம்மில் எவரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் ஆழ்ந்திருந்தனர். மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அலீ பின் அபீதாலிப் எங்கே?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண்வலி ஏற்பட்டுள்ளது' என்று கூறப்பட்டது. நபி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்புங்கள்' என்று கூறினார்கள். அலீ (ரழி) அவர்கள் அழைத்து வரப்பட்டபோது அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காகப் பிரார்த்தித்தார்கள். உடனே அன்னாரது கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகிவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், அலீ (ரழி) அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். உடனே அலீ (ரழி) அவர்கள், 'நம்மைப் போன்று அவர்களும் (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும்வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா?'என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள், 'நிதானமாகச் சென்று, அவர்களின் களத்தில் இறங்குங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்கள்மீது கடமையாகின்ற, அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நல்வழியளிப்பது (அரபியரின் உயரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (சொந்தமாக்கிக் கொள்வதை விட, அல்லது அவற்றைத் தர்மம் செய்வதை)விட உங்களுக்குச் சிறந்ததாகும' என்று சொன் னார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதரில் நல்லொழுக்கம்(நற்குணம்); மிக்கவராக இருந்தார்கள்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.