Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 4 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'அல்லாஹ்வுடைய நபியே! எமக்குப் பொறுப்பாக வரும் தலைவர்கள், அவர்களது உரிமைகளைக் கேட்டு எடுத்துக்கொண்டு, எமது உரிமைகளைத் தராமல் இருந்தால், என்ன செய்யுமாறு ஏவுகின்றீர்கள்?' என்று கேட்டார்கள். நபியவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. மீண்டும் கேட்டும் நபியவர்கள் பொருட்படுத்தவில்லை. அவர் மீண்டும் இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை கேட்டபோது, அஷ்அஸ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் அவரைப் பிடித்து இழுத்தார்கள். அப்போது நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள். 'நீங்கள் செவிசாய்த்துக் கட்டுப்படுங்கள். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளவை, அவர்களுக்குக் கடமையாக இருக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்டுள்வை, உங்களுக்குக் கடமையாக இருக்கும்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு தினம் எழுந்து நின்று உள்ளங்கள் நடுங்கி, கண்கள் கண்ணீர் சிந்துமளவிற்கு மிகவும் ஆழமான ஓர் உபதேசத்தை செய்தார்கள். அப்போது ஒருவர் 'அல்லாஹ்வின் தூதரே, இது விரைவில் பிரிந்து செல்லும் ஒருவரின் அறிவுரையாயிற்றே. எனவே, எங்களுக்கு அறிவுரை கூறுங்கள்' என்றார். அதற்கு நபியவர்கள்: 'அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன், ஒரு அபீஸீனிய அடிமை உங்களுக்குப் பொறுப்பாளராக வந்தாலும், அவருக்கு செவிசாய்த்து கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள். எனக்குப் பிறகு நீங்கள் கடுமையான கருத்து வேறுபாடுகளைக் கண்டு கொள்வீர்கள். எனவே, எனது ஸுன்னாவையும் நேர்வழிநடந்த கலீபாக்களின் ஸுன்னாவையும் உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் உங்கள் கடைவாய் பற்களால் பற்றிக்கொள்ளுங்கள்; (அதாவது அதனை உறுதியாக கடைப்பிடித்தொழுகுங்கள்) மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட நூதன அனுஷ்டானங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன், மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு விஷயமும் வழிகேடாகும் (பிழையான வழிகாட்டுதலாகும்.)
சரியானது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
இறையச்சத்தையும், ஒரு அடிமையே உங்களது தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு முழுமையாகக் கட்டுப்படுவதையும் நான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன். நிச்சயமாக உங்களில் அதிக நாட்கள் வாழ்பவர்கள் அதிக கருத்துவேறுபாடுகளை சந்திப்பீர்கள். ஆகவே நீங்கள் என்னுடைய நடைமுறைகளையே பின்பற்றுங்கள்.அதுபோலவே நல்வழிநடந்த கலீபாக்களின் நடைமுறைகளையும் பின்பற்றுங்கள். உறுதியுடன் அவற்றை கடைப்பிடித்து ஓழுகுங்கள். மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்படுபவைகள் (பித்அத்துக்கள்) குறித்து கவனமாக இருங்கள். மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்டவைகள் அனைத்தும் நூதன கிரியைகளாகும். ஒவ்வொரு நூதன கிரியையும் வழிகேடாகும்'.
சரியானது இமாம்களான அபு தாவூத், அத்திர்மிதி ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டது
'மார்க்கம் என்பது நலன் நாடுவதாகும்;.' என்று நபியவர்கள் கூறியபோது, யாருக்கு நலன் நாட வேண்டும்? என நாம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள்: அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்திற்கும், அவனது தூதரிற்கும், முஸ்லிம்களின் தலைவருக்கும், இன்னும் முஸ்லிம் பொதுமக்களுக்கும் நலன் நாடுவதாகும்' எனக் கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்