Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 13 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
இறையச்சத்தையும், ஒரு அடிமையே உங்களது தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு முழுமையாகக் கட்டுப்படுவதையும் நான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன். நிச்சயமாக உங்களில் அதிக நாட்கள் வாழ்பவர்கள் அதிக கருத்துவேறுபாடுகளை சந்திப்பீர்கள். ஆகவே நீங்கள் என்னுடைய நடைமுறைகளையே பின்பற்றுங்கள்.அதுபோலவே நல்வழிநடந்த கலீபாக்களின் நடைமுறைகளையும் பின்பற்றுங்கள். உறுதியுடன் அவற்றை கடைப்பிடித்து ஓழுகுங்கள். மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்படுபவைகள் (பித்அத்துக்கள்) குறித்து கவனமாக இருங்கள். மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்டவைகள் அனைத்தும் நூதன கிரியைகளாகும். ஒவ்வொரு நூதன கிரியையும் வழிகேடாகும்'.
சரியானது இமாம்களான அபு தாவூத், அத்திர்மிதி ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டது
'மார்க்கம் என்பது நலன் நாடுவதாகும்;.' என்று நபியவர்கள் கூறியபோது, யாருக்கு நலன் நாட வேண்டும்? என நாம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள்: அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்திற்கும், அவனது தூதரிற்கும், முஸ்லிம்களின் தலைவருக்கும், இன்னும் முஸ்லிம் பொதுமக்களுக்கும் நலன் நாடுவதாகும்' எனக் கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அடியான் ஒருவனுக்கு மக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே மரணித்து விட்டால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்துவிடுகிறான்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
உண்மையில், எனக்குப் பிறகு நீங்கள் வெறுக்கும் சில விடயங்களும், ஆட்சியாளர்கள் செல்வங்களை தாங்களே அனுபவிக்கும் போக்கும் காணப்படும்' அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்? என்று கேட்டனர். அவர் கூறினார்: 'உங்களுக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் உங்களுக்குரியதை அல்லாஹ்விடம் கேளுங்கள்.' என்றார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார். ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகத்தின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இன, கோத்திரத்திற்காகக் கோபப்படுகிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும். யார் என் சமுதாயத்தாருக்கு எதிராக கிளர்ச்சி செய்து, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்