Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 21 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
மனிதர்களை சுவர்க்கத்தினுள் அதிகமாக நுழைவிக்கச் செய்யும் செயல்கள் என்ன என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது, அதற்கு நபியவர்கள் சுவனத்தில் அதிகம் நுழைவிப்பது அல்லாஹ்வின்மீதான அச்சமும், நற் பண்புகளுமாகும்'. என்றார்கள் மேலும் நரகத்தினுள் அதிகமாக நுழைவிக்கச் செய்யும் செயல்கள் என்ன என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது, அதற்கு நபியவர்கள் நாவும் மறையுறுப்பும் என்றார்கள்.
நம்பகமானது இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
அல்லாஹ் கூறுகின்றான் : என்னுடைய நல்லடியார்களுக்கு, எந்தக் கண்களும் கண்டிராத, எந்தக் காதுகளும் கேட்டிராத, எந்த மனித உள்ளத்திலும் தோன்றிராத விடயங்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளேன். அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் விரும்பினால், "அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) 'எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது". (அஸ்ஸஜ்தா : 17) என்ற வசனத்தை ஓதிப் பாருங்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் இருந்தோம். அப்போது, ஏதோ விழுந்த சப்தத்தை அவர்கள் கேட்டார்கள். (நாங்களும் அதனைக் கேட்டோம்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'இது என்ன (சப்தம்) என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று சொன்னோம். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்குள் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும். அது இந்த நேரம்வரை நரகத்திற்குள் சென்று இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது' என்று சொன்னார்கள். (அது விழுந்த சப்தத்தைத்தான் (இப்போது) நீங்கள் செவியுற்றீர்கள்'.) என்று அவர் (ஸல்) கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்றும் 'முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'ஈஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ('ஆகுக!' என்னும்) ஒரு வார்ததை(யால் பிறந்தவர்)' என்றும், 'அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்' என்றும், சொர்க்கம் (இருப்பது) உண்மை தான்' என்றும், நரகம் இருப்பது உண்மைதான் எனவும் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்.'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கு இயந்திரத்தைச் சுற்றிவருவதைப்போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, 'இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர் நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்ய வில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்துவந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்'என்று கூறுவார்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.