Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 12 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
“நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம்: ஒரு ஆணின் பார்வை திடீரென்று ஒரு அந்நியப் பெண்ணின் மீது எவ்வித நோக்கமின்றிப் பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள்: உடனடியாக எனது பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்''.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
உங்களுக்குக் கீழால் உள்ளவர்களைப் பாருங்கள். உங்களுக்கு மேலால் உள்ளவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே, அல்லாஹ் உங்களுக்குச் செய்துள்ள அருள்களை அற்பமாகக் கருதாமல் இருக்கப் பொருத்தமானதாகும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ், தனது நிழலைத் தவிர வேறு நிழல்கள் இல்லாத அந்த (மறுமை) நாளில் ஏழு தரப்பினருக்கு தனது நிழலைக் கொடுப்பான் : நீதம் செலுத்தும் ஆட்சியாளன், அல்லாஹ்வை வணங்குவதிலேயே வளர்ந்த வாலிபன், தனது உள்ளத்தால் பள்ளிவாசல் களுடன் பிணைக்கப்பட்ட மனிதன். அல்லாஹ்வுக்காக நேசம்கொண்டு, அவனுக்காகவே சேர்ந்து, அவனுக்காகவே பிரிந்த இரு மனிதர்கள். ஒரு மனிதனை அழகும் மதிப்பும் கொண்ட ஒரு பெண் பாவத்திற்காக அழைக்க, அவர் 'அல்லாஹ்வை நான் பயப்படுகின்றேன்' என்று கூறிக் கொண்டவர். தனது வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத அளவு மறைத்து, தருமம் செய்த மனிதர், அல்லாஹ்வைத் தனிமையில் நினைத்து, கண்ணீர் வடித்தவர்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
ஹலாலும் (ஆகுமானவைகள்) தெளிவானது. ஹராமும் (தடை செய்யப்பட்டவைகள்) தெளிவானது. இவ்விரண்டிற்குமிடையே (இவை ஹலாலானவையா?, அல்லது ஹராமானவையா? என்ற) சந்தேகத்திற்கிடமான விடயங்களுமுண்டு. அவற்றை மக்களில் அதிகமானோர் அறியாதிருக்கின்றனர். சந்தேகத்திற்கிடமான வற்றைத் தவிர்ந்து கொண்டவர் தனது மார்க்கத்தையும், மானத்தையும் பாதுகாத்துக் கொண்டார். யார் சந்தேகமான விடயத்தில் விழுந்து விடுகிறாரோ அவர்; ஹராத்தில் விழுந்து விட்டவராவார். இது தனது மந்தையை அனுமதிக்கப்படாத ஒரு வேலிக்கருகாமையில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு இடையனின் செயற்பாட்டை ஒத்ததாகும். அந்தக் கால் நடைகள் அவை தடுக்கப்பட்ட அப்பகுதிக்குள் சென்று மேய்ந்து விடக் கூடிய சாத்தியம் எப்போதும் இருக்கிறது. ஆக, அதிகாரம் பெற்ற ஒவ்வொருவருக்கும் அவருக்குரிய ஒரு பாதுகாப்பு எல்லை உண்டு. அல்லாஹ்வின் பாதுகாப்பு எல்லை, அவன் அனுமதிக்காத(ஹராமான) காரியங்களாகும். அறிந்துகொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைப் பகுதி உண்டு. அது சீராகி விடுமானால் உடல் முழுவதும் சீராகி விடுகின்றது. அது கெட்டு விடுமாயின் உடல் முழுவதும் கெட்டு விடுகின்றது. அந்த சதைப் பகுதி இதயமாகும்.
சரியானது இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்