Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 13 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
நான், 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய எனக்கு ஏதாவது கற்றுக் கொடுங்கள்' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள்;' என்று கூறினார்கள். சில நாட்களுக்குப் பிறகு, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் கேட்க ஏதாவது ஒன்றை எனக்குக் கற்றுக் கொடுங்கள்' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: 'அப்பாஸே! அல்லாஹ்வின் தூதரின் தந்தைவழிச் சகோதரரே! இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்விடம் நல்வாழ்வைக் கேளுங்கள்' என்று என்னிடம் கூறினார்கள்.
வேறொரு அறிவிப்புடன் இணைந்து சரியாகியது இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
என்னுடைய ரப்பே! எனது தவறுகளையும், அறியாமையையும், எனது எல்லா விவகாரங்களிலும் நான் செய்த எல்லைமீறல்களையும், என்னை விட நீ அறிந்தவைத்திருப்பவற்றையும் மன்னித்து விடுவாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களையும், நான் வேண்டுமென்று செய்தவற்றையும், எனது அறியாமையையும், எனது பரிகாசத்தையும் மன்னித்துவிடுவாயாக! அவை அனைத்துமே என்னிடம் உள்ளன. யா அல்லாஹ்! நான் முற்படுத்தியவைகள், பிற்படுத்தியவைகள், மறைத்துக்கொண்டவைகள், பகிரங்கப் படுத்தியவைகள் என அனைத்தையுமே மன்னித்துவிடுவாயாக! நீயே முற்படுத்துபவன்! நீயே பிற்படுத்துபவன்! நீ அனைத்திற்கும் சக்தியுள்ளவன்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'அல்லாஹும்மஹ்தினீ, வ ஸத்தித்னீ' (இறைவா! எனக்கு நல்வழி காட்டுவாயாக! நேர்மையானதைச் சரியாகச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக!) என்று பிரார்த்திப்பீராக. அப்போது (வழி தவறியவனுக்குச் சரியான) வழியை நீர் காட்டுவதையும், (வளைந்த) அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக' என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
யா அல்லாஹ்! நான் உன்னிடம், நேர்வழியையும், இறையச்சத்தையும், பத்தினித்தனத்தையும், தன்நிறைவையும் கேட்கின்றேன்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
யா அல்லாஹ்! எனது மார்க்கத்தை எனக்கு சீர்செய்து தருவாயாக! அதுவே எனது விவகாரங்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது. எனது உலக வாழ்வையும் சீர்செய்து தருவாயாக! அதில் தான் எனது வாழ்ப்பு உள்ளது. எனது மறுமையையும் எனக்குச் சீர்செய்து தருவாயாக! அதில் தான் எனது மீளுதல் உள்ளது. இந்த வாழ்க்கையை எனக்கு எல்லா நலவுகளையும் அதிகப்படுத்தித் தரும் ஒன்றாக ஆக்கிவிடு. மரணத்தை எனக்கு அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுதலையாக ஆக்கிவிடு.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்