Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 3 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
சுவனத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. ஒவ்வொரு இரு படித்தரங்களுக்கும் மத்தியில் வானம் மற்றும் பூமிக்கு மத்தியில் உள்ளது போன்று இடைவெளி இருக்கும். பிர்தவ்ஸ் தான் உயர்ந்த படித்தரத்தில் உள்ளதாகும். அதற்கு மேலிருந்து தான், சுவனத்தின் நான்கு ஆறுகளும் ஊற்றெடுக்கச் செய்யப்படுகின்றன. அதற்கு மேலால் தான் அர்ஷ் உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடத்தில் கேட்டால், அவனிடம் பிர்தவ்ஸையே கேளுங்கள்.
சரியானது இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகமாக ' யா முகல்லிபல் குலூப் ஸப்பித் கல்பி அலா தீனிக '- (பொருள்) உள்ளங்களை புரட்டுபவனே! என்னுடைய உள்ளத்தினை உனது மார்க்கத்தில் நிலைத்து இருக்க வைப்பாயாக' என அதிகம் கூறுபவர்களாக இருந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நாம் உம்மையும் நீங்கள் கொண்டுவந்தவற்றையும் விசுவாசம் கொண்டுள்ளோம். அவ்வாறிருந்தும் எம்மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபியவர்கள், ஆம் என்று கூறிவிட்டு, 'நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்' என பதிலளித்தார்கள்.
சரியானது இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
நான், 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய எனக்கு ஏதாவது கற்றுக் கொடுங்கள்' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள்;' என்று கூறினார்கள். சில நாட்களுக்குப் பிறகு, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் கேட்க ஏதாவது ஒன்றை எனக்குக் கற்றுக் கொடுங்கள்' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: 'அப்பாஸே! அல்லாஹ்வின் தூதரின் தந்தைவழிச் சகோதரரே! இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்விடம் நல்வாழ்வைக் கேளுங்கள்' என்று என்னிடம் கூறினார்கள்.
வேறொரு அறிவிப்புடன் இணைந்து சரியாகியது இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது