Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 3 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

பதிவாகிய நூல்

'ஓர் அடியான் ஸுஜூத் செய்து கொண்டிருக்கும் நிலையில்தான் தனது இரட்சகனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான், ஆகவே அந்நிலையில் அதிகமாக பிரார்த்தனை செய்யுங்கள்'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'நிச்சயமாக அல்லாஹ் தூயவன், அவன் தூயவைகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் தனது தூதர்களிடம் எதைச் செய்யும்படி கட்டளையிட்டானோ, அதையே நம்பிக்கையாளர்களையும் (முஃமின்களையும்) செய்யும்படி கட்டளையிட்டுள்ளான்." 'தூதர்களே! தூயவைகளிலிருந்தே உண்ணுங்கள், நற்செயல்களையே செய்யுங்கள்' என்று கூறிய எல்லாம் வல்ல அல்லாஹ் ''நம்பிக்கையாளர்களே! நான் உங்களுக்குத் தந்துள்ளவற்றில் தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்'' என்றும் கூறியுள்ளான். பின்னர் பெருமானர் (ஸல்) அவர்கள் அதிக தூரம் பயணம் செய்த ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். தலைவிரிகோலமாக, மாசு படிந்தவராக அவர் தனது கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தி ' எனது இரட்டசகனே! எனது இரட்சகனே! என கதறுகிறார். ஆனால் அவர் தனது உணவைப் பெறும் வழி தடுக்கப்பட்டதாக (ஹராமானதாக) இருக்கின்றது, அவர் அருந்தும் பானம் தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அவரது உடை தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அவரது மொத்த வாழ்க்கையே ஹராமான வழியில் தான் இருக்கின்றது. இந்த நிலையில் அவர் எவ்வாறு இறைவனிடமிருந்து பதிலை எதிர்பார்க்க முடியும்!
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர எதனையும் அவன் ஏற்கமாட்டான். அல்லாஹ் தூதர்களுக்கு ஏவியதையே விசுவாசிகளுக்கும் ஏவினான். "தூதர்களே! நல்லவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள், இன்னும், நற்செயலைச் செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்" (ஸூரா முஃமினூன் : 51), மேலும் கூறுகின்றான் "நம்பிக்கைக் கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு - (வணக்கத்திற்குரியவனான) அவனையே வணங்குபவர்களாக இருந்தால் - நீங்கள் நன்றி செலுத்துங்கள்." (ஸூரா அல் பகரா : 172) பின்பு நபியவர்கள் ஒரு மனிதனைப் பற்றிக் கூறினார்கள். அவன் நீண்ட ஒரு பயணத்தில், பரட்டைத் தலையுடன், புழுதி படிந்த நிலையில், தனது இரு கைகளையும் உயர்த்தி, 'யா ரப்பு! யா ரப்பு!' எனப் பிரார்த்திக்கின்றான். ஆனால், அவனது உணவு ஹராமானது, அவனது குடிபானமும் ஹராமானது, அவனது ஆடையும் ஹராமானது, அவன் ஹராமினாலே உணவு ஊட்டப்பட்டுள்ளான். அவனுக்கு எவ்வாறு பதிலளிக்கப்படும்!'
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்