عربي - Arabic English Qafár af - Afar Afrikaans - Afrikanns Akan Shqip - Albanian አማርኛ - Amharic Հայերեն - Armenian অসমীয়া - Assamese Azərbaycanca - Azerbaijani Bamanankan - Bambara Bassa Bemba বাংলা - Bengali Bosanski - Bosnian Български - Bulgarian မြန်မာဘာသာ - Burmese Bisaya - Cebuano Cham Нохчий - Chechen chiCheŵa - Chewa 中文 - Chinese Адыгэбзэ - Circassian Hrvatski - Croatian Česky - Czech Dagbani Dansk - Danish فارسی دری - Dari Dendi ދިވެހި ބަސް - Dhivehi Nederlands - Dutch إستوني - Estonian Suomi - Finnish Français - French Fulfulde - Fula ქართული - Georgian Deutsch - German Ελληνικά - Greek ગુજરાતી - Gujrati Kreyòl ayisyen - Haitian Creole Hausa हिन्दी - Hindi Magyar - Hungarian Igbo Indonesia - Indonesian Italiano - Italian 日本語 - Japanese Jóola - Jola ಕನ್ನಡ - Kannada Қазақша - Kazakh ភាសាខ្មែរ - Khmer Kikuyu Ikinyarwanda - Kinyarwanda Ikirundi - Kirundi 한국어 - Korean كوردی سۆرانی - kurdish كوردي kurmancî - Kurmanji Kyrgyz ລາວ - Lao latviešu - Latvian Lingala lietuvių - Lithuanian Luganda Македонски - Macedonian Maguindanaon Malagasy - Malagasy Bahasa Melayu - Malay മലയാളം - Malayalam Mandinka मराठी - Marathi Mõõré - Moore नेपाली - Nepali أنكو - NKo Norwegian ଓଡ଼ିଆ - Odia oromoo - Oromo پښتو - Pashto فارسی - Persian Polski - Polish Portuguese ਪੰਜਾਬੀ - Punjabi Română - Romanian Русский - Russian Српски - Serbian Shona සිංහල - Sinhala Slovenščina - Slovenian Soomaaliga - Somali Soninke Sesotho - Sotho Español - Spanish Kiswahili - Swahili Svenska - Swedish Tagalog Тоҷикӣ - Tajik தமிழ் - Tamil తెలుగు - Telugu ไทย - Thai ትግረኛ - Tigrinya Türkçe - Turkish Ukrainian اردو - Urdu ئۇيغۇرچە - Uyghur Ўзбек - Uzbek Việt Nam - Vietnamese Wolof Yao Yorùbá - Yoruba Zarma زولو - Zulu
617 ஹதீஸ்கள்
நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்
பிரிவுகள்
ஹதீஸின் தரம்
பதிவாகிய நூல்
அறிவிப்பாளர்
எல்லா அறிவிப்பாளர்களையும் காட்டு (68)
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பின்னால் 'உஃபைர்' என்று அழைக்கப்படும் கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், 'முஆதே! அல்லாஹ்வுக்கு அடியார்கள் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை நீர் அறிவீரா? மேலும் அடியார்களுக்கு அல்லாஹ் ஆற்ற வேண்டிய கடமை யாது என்பதையும் நீர் அறிவீரா என்று (என்னிடம்) கேட்டார்கள்.
அதற்கு நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்' என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ' அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமை என்னவென்றால், அவர்கள் அவனை மாத்திரமே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. அல்லாஹ்வின் மீது அடியார்களுக்கு உள்ள உரிமை –கடமை யாதெனில், அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இருப்பவரை (மறுமையில்) அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும்' என்று கூறினார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே! இந்த நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், 'மக்களுக்கு இந்த நற்செய்தியை (இப்போது) அறிவிக்காதீர்;. அவர்கள் இந்தச் செய்தியை மட்டுமே சார்ந்து (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள்' என்று பதில் அளித்தார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'நீங்கள் மிகவும் பெரிய ஒரு விடயம் குறித்து வினவி இருக்கின்றீர்கள். இருந்தாலும் அல்லாஹ் யாருக்கு அதனை இலகுவாக்கி வைத்திருக்கின்றானோ அது அவர்களுக்கு மிகவும் இலகுவானதாக இருக்கும். நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், அவனுக்கு எதனையும் இணைவைக்காதீர். கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிலைநாட்டுங்கள். 'ஸகாத்'த்தை கொடுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பிருங்கள். நீங்கள் இறைஇல்லத்திற்கு புனித பயணம் மேற்கொள்ளுங்கள். (ஹஜ் செய்யுங்கள்;). என்று கூறிவிட்டு, பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு நன்மையின் வாசல்களை காட்டித் தரட்டுமா? என வினவி விட்டுச் சொன்னார்கள் : நோன்பு ஒரு கேடயம், நீர் நெருப்பை அணைப்பது போல் தர்மம் பாவங்களை அழித்தொழிக்கின்றது. அதுபோலவே இரவின் கடைசிப் பகுதியில் ஒருவரின் தொழுகையும் என்று கூறி விட்டு, பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வரும் இறைவசனத்தை ஓதினார்கள் : ''அவர்கள் (இரவில்) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி, (எழுந்து அப்புறப்பட்டு) தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும், (அவனைப்) பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்த அவர்கள் செலவு செய்வார்கள்'. அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக, அவர்களுக்காக(ச் சித்தப்படுத்தி) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிரக் கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்து கொள்ள முடியாது' (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ளன.)". அல்குர்ஆன் (32:16-17)
பின் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு இந்த விடயத்தில் (மார்க்கத்தின்) தலையாயது பற்றியும் தூண் மற்றும் உச்சம் பற்றியும் சொல்லட்டுமா?' என்றார்கள். 'இறை தூதரவர்களே, ஆம்! சொல்லுங்கள் என்றேன். பெருமானார் (ஸல்) அவர்கள், இந்த விடயத்தின் தலையாயது இஸ்லாமாகும். அதன் தூண் தொழுகையாகும். அதன் உச்சி ஜிஹாத் ஆகும் என்றார்கள். பிறகு அவர்கள், இவை எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது குறித்து நான் சொல்ல வேண்டாமா? என வினவினார்கள். நான் 'இறைவனின் தூதரவர்களே! ஆமாம் சொல்லுங்கள்'' என்றேன். பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களது நாவை கரத்தால் பற்றிக் கொண்டு, ''இதைக் கட்டுப்படுத்துங்கள்'' என்று சொன்னார்கள்.
இறைவனின் தூதரவர்களே! நாம் பேசுவது குறித்து குற்றம் பிடிக்கப்படுவோமா? என்று நான் கேட்டேன். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள், ''உம் தாய் உம்மை இழக்கட்டும்!. மனிதர்கள் தங்கள் நாவால் அறுவடை செய்தவைகளைத் தவிர அவர்களை நரக நெருப்பில் முகங்குப்புற தள்ளக் கூடியது வெறெதுவும் உண்டா?'' என்று கேட்டார்கள். -
1.ஜிஹாத் : ஜிஹாத் என்பதற்கு அறப்போர் அல்லது புனிதப்போர் எனப் பொதுவாக பொருள் கொள்ளப்படுகின்றது. அதற்கு இன்னும் விரிவான பொருள்கள் உண்டு. இதில் இஸ்லாத்தை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளும் அடங்கும். ஆகவே தான் 'ஜிஹாத்' என்ற அரபிச் சொல் அப்படியே இங்கு கையாளப்பட்டிருக்கின்றது.
2. ஸகிலத்க உம்முக. ''தவறான பயனற்ற பேச்சைப் பேச வேண்டாம்!'' என்று கூறுவதற்கு அரபி மொழியில் இச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.
சரியானது இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
நான் நபியவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். ஒரு நாள், நாம் பயணித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு சமீபமாகச் சென்றுவிட்டேன். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய தூதரே! என்னை நரகை விட்டுத் தூரப்படுத்தி, சுவனத்தில் நுழைய வைக்கும் ஒரு அமலை எனக்குக் காட்டித் தாருங்கள்' எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள், 'நீங்கள் மிக முக்கியமான ஒன்றைப் பற்றிக் கேட்டுவிட்டீர்கள். இதை யாருக்கெல்லாம் அல்லாஹ் இலகுபடுத்திக் கொடுக்கின்றானோ, அது அவர்களுக்க இலகுவாக இருக்கும். நீங்கள் அல்லாஹ்வை -அவனுக்கு எந்த இணையும் கற்பிக்காத நிலையில் - வணங்க வேண்டும். மேலும், தொழுகையையும் நிலைநாட்ட வேண்டும். ஸகாத்தைக்கொடுக்கவேண்டும். ரமழானில் நோன்பு நோற்கவேண்டும். கஃபாவை ஹஜ் செய்யவேண்டும்.' என்று கூறிவிட்டு, 'நன்மையின் வாயில்களை உனக்கு அறிவித்துத் தரட்டுமா? நோன்பு ஒரு கேடயம். நீர் நெருப்பை அனைப்பது போன்று, தர்மம் பாவங்களை அனைத்துவிடும். ஒரு மனிதன் நடு இரவில் தொழவதும் (நன்மையின் ஒரு வாயிலாகும்.) பின்பு "அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து விலகிவிடும்; அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும், ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களின் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது." என்ற வசனத்தை ஓதினார்கள். பின்பு நபியவர்கள், 'ஒரு விடயத்தின் தலையான அம்சத்தையும், அதன் பிரதான தூணையும், அதன் உயர்நிலையையும் உனக்குக் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம்! அல்லாஹ்வுடைய தூதரே!' எனக் கூறியபோது, 'தலையான அம்சம் இஸ்லாமாகும். அதன் பிரதான தூண் தொழுகையாகும். அதன் உயர்நிலை ஜிஹாதாகும்.' என்று கூறிவிட்டு, 'அவை அனைத்தையும் பாதுகாத்துத் தரும் ஒன்றைக் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு நான், ஆம்! அல்லாஹ்வுடைய நபியே! எனக் கூறியதும், தமது நாவைப் பிடித்து, 'இதைத் தடுத்துக்கொள்' என்று கூறினார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய நபியே! நாம் பேசுவதற்கெல்லாம் குற்றம் பிடிக்கப்படுவோமா?' எனக் கேட்டபோது, 'உன் தாய் உன்னை இழக்கட்டும். முஆதே! மக்களை நரகில் முகங்குப்புற எறிந்து விடுவது, அவர்களது நாவின் அறுவடைகளைத் தவிர வேறென்ன இருக்கமுடியும்?'
ஒட்டுமொத்த வழிகள் ஊடாக சரியாகியது (ஸஹீஹ்) இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது