Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 114 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

அறிவிப்பாளர்

எல்லா அறிவிப்பாளர்களையும் காட்டு (53)
நயவஞ்சகனின் நிலை இரு ஆண் ஆடுகளை சுற்றிவரும் பெண் ஆட்டின் நிலையைப் போன்றதாகும். ஒரு முறை அதனிடம் செல்கிறது; மறுமுறை வேறு ஒன்றிடம் செல்கிறது.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'இறைத்தூதர் அவர்களே! நான் அறியாமைக் காலத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன்பு 'தர்மம் செய்தல், உறவினரைச் சேர்(ந்து வாழ்)தல்' போன்ற நல்ல காரியங்களைச் செய்துள்ளேன். அவற்றிக்கு (மறுமையில் எனக்கு) நன்மை ஏதும் உண்டா?' என கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்கூலி)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்! என்று பதிலளித்தார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'நிச்சயமாக ஒரு (முஸ்லிம்) அடியானுக்கும்; இணைவைப்பிற்கும் இறைநிராகரிப்பிற்கும் இடையிலான வித்தியாசம் தொழுகையை விடுவதாகும் '.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நான், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'பாவங்களிலேயே மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்'உன்னைப் படைத்த, இறைவனுக்கே நீ இணைகற்பிப்பது ஆகும்' என்று பதிலளித்தார்கள். 'பிறகு எது?' என்று கேட்டேன் அதற்கு அவர்கள், ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீயே கொலை செய்வது' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்றேன். 'உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவது' என்றார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நாய் மற்றும் உருவமிருக்கும் வீட்டில் மலக்குமார்கள் பிரவேசிக்க மாட்டார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது மடங்குகளில் ஒன்றாகும்;. என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமானதாயிற்றே'' என்று கேட்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள்,'(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்' என்றார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
"ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமைகள் ஆறு என நபியவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அவை எவை எனக் கேட்கப்பட்டது ? அதற்கு நபியவர்கள் : ஒரு முஸ்லிமைச் சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறுவீராக. அவர் உன்னை (விருந்துக்கு) அழைத்தால் அதற்கு பதிலளிப்பீராக. உன்னிடம் அறிவுரை கேட்டால் அவருக்கு அறிவுரை கூறுவீராக. அவர் தும்மி அல்ஹம்து லில்லாஹ் என்று கூறினால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் என்று கூறுவீராக. அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை சுகம் விசாரிக்கச் செல்வீராக. அவர் மரணித்துவிட்டால் அவரை அடக்கம் செய்வதற்காக பின்தொடர்ந்து செல்வாயாக என்று கூறினார்கள்".
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸலல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றி, ரமழானில் நோன்பையும் நோற்று, ஹலாலை ஹலாலாக்கி, ஹராத்தை ஹராமாக்குகின்றேன். இதற்குமேல் அதிகமாக நான் எதுவும் செய்யவில்லையாயின், இந்த நிலையில் நான் சுவர்க்கத்தில் நுழைவேனா? என்று எனக்குக் கூறுங்கள் என வினவினார்'. அதற்கு நபியவர்கள் 'ஆம்!' என்று பதிலளித்தார்கள்' அதற்கு அந்த மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக இதற்கு மேலதிகமாக எதனையும் நான் செய்யமாட்டேன் என்று கூறினார்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்