Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 114 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

அறிவிப்பாளர்

எல்லா அறிவிப்பாளர்களையும் காட்டு (53)
சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டார்கள் அந்நாளில் தான் சுவர்க்கத்தினுள் தங்கவைக்கப் பட்டு அந்நாளில் தான் அதிலிருந்து வெளியேற்றவும் பட்டார்கள். அத்துடன் யுக முடிவு நாளும் ஜும்ஆத் தினத்தில்தான் நிகழும்'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டிற்கு ஆளுநராக அனுப்பிய போது பின்வருமாறு கூறினார்கள்: 'நீர் வேதமுடையவர்களிடத்தில் செல்கிறீர். அவர்களிடம் சென்றடைந்துவிட்டால் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சி சொல்லும் படி அவர்களை அழைப்பீராக!. இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால், 'அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கடமையாக்கியுள்ளான்' என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்கு கட்டுப்பட்டால் 'அல்லாஹ் அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் ஏழைகளுக்குக்கு வழங்குவதற்காக ஸகாத்தைத் கடமையாக்கியுள்ளான்' என அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் விலையுயர்ந்த பொருட்களை எடுப்பதை குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப் பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையும் கிடையாது'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'இயலாமை, புத்திசாலித்தனம் அல்லது புத்திசாலித்தனம், இயலாமை உட்பட ஒவ்வொரு விடயமும் இறைவிதியின் அடிப்படையிலேயே நிகழ்கிறது.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அல்லாஹ்வின் தூதரே! ஹவ்ளுல் கவ்ஸரின் பாத்திரங்கள் எத்தனை? என நபியவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எவன் கைவசம் முஹம்மதின் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, அதன் பாத்திரங்கள் இருள் நிறைந்த இரவில் வானத்தின் சிறிய, பெரிய நட்சத்திரங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கின்றன. சுவர்க்கத்தின் பாத்திரங்களில் எவர் தண்ணீர் அருந்துகிறாரோ அவருக்கு இறுதி வரை தாகமெடுக்காது. சுவர்க்கத்திலிருந்து இரண்டு ஆறுகள் ஊற்றெடுக்கின்றன. அதில் நீர் அருந்தியவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது அதன் அகலமோ சிரியா (ஷாம்) தேசத்திலுள்ள அம்மான், ஈலா ஆகிய ஊர்களுக்கிடையே உள்ள தூரத்திற்குச் சமமாக இருக்கும். அதன் தண்ணீரோ பாலைவிட அதிக வெண்மையாய் இருக்கும். அதன் சுவையோ தேனைவிட மிக இனிமையாக இருக்கும் என்று கூறினார்கள்.'
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
மறுமை நாளில் (மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
"கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை யார் மனனம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார். மற்றொரு அறிவிப்பில் ஸுறா கஹ்பின் இறுதி பத்து வசனங்கள் என்று வந்துள்ளது".
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
மக்களிடம் இரு பண்புகள் உள்ளன. அவை அவர்களிடம் இறைநிராகரிப்பை ஏற்படுத்திவிடும் : வம்சத்தில் குறைகூறுவது, மரணித்த ஒருவருக்காக ஒப்பாரி வைத்து அழுவது.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, 'அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.