عربي - Arabic English Qafár af - Afar Afrikaans - Afrikanns Akan Shqip - Albanian አማርኛ - Amharic Հայերեն - Armenian অসমীয়া - Assamese Azərbaycanca - Azerbaijani Bamanankan - Bambara Bassa Bemba বাংলা - Bengali Bosanski - Bosnian Български - Bulgarian မြန်မာဘာသာ - Burmese Bisaya - Cebuano Cham Нохчий - Chechen chiCheŵa - Chewa 中文 - Chinese Адыгэбзэ - Circassian Hrvatski - Croatian Česky - Czech Dagbani Dansk - Danish فارسی دری - Dari Dendi ދިވެހި ބަސް - Dhivehi Nederlands - Dutch إستوني - Estonian Suomi - Finnish Français - French Fulfulde - Fula ქართული - Georgian Deutsch - German Ελληνικά - Greek ગુજરાતી - Gujrati Kreyòl ayisyen - Haitian Creole Hausa हिन्दी - Hindi Magyar - Hungarian Igbo Indonesia - Indonesian Italiano - Italian 日本語 - Japanese Jóola - Jola ಕನ್ನಡ - Kannada Қазақша - Kazakh ភាសាខ្មែរ - Khmer Kikuyu Ikinyarwanda - Kinyarwanda Ikirundi - Kirundi 한국어 - Korean كوردی سۆرانی - kurdish كوردي kurmancî - Kurmanji Kyrgyz ລາວ - Lao latviešu - Latvian Lingala lietuvių - Lithuanian Luganda Македонски - Macedonian Maguindanaon Malagasy - Malagasy Bahasa Melayu - Malay മലയാളം - Malayalam Mandinka मराठी - Marathi Mõõré - Moore नेपाली - Nepali أنكو - NKo Norwegian ଓଡ଼ିଆ - Odia oromoo - Oromo پښتو - Pashto فارسی - Persian Polski - Polish Portuguese ਪੰਜਾਬੀ - Punjabi Română - Romanian Русский - Russian Српски - Serbian Shona සිංහල - Sinhala Slovenščina - Slovenian Soomaaliga - Somali Soninke Sesotho - Sotho Español - Spanish Kiswahili - Swahili Svenska - Swedish Tagalog Тоҷикӣ - Tajik தமிழ் - Tamil తెలుగు - Telugu ไทย - Thai ትግረኛ - Tigrinya Türkçe - Turkish Ukrainian اردو - Urdu ئۇيغۇرچە - Uyghur Ўзбек - Uzbek Việt Nam - Vietnamese Wolof Yao Yorùbá - Yoruba Zarma زولو - Zulu
617 ஹதீஸ்கள்
நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்
பிரிவுகள்
ஹதீஸின் தரம்
பதிவாகிய நூல்
மீதமுள்ள மூலங்களைக் காட்டு
அறிவிப்பாளர்
எல்லா அறிவிப்பாளர்களையும் காட்டு (53)
அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் ஜாஹிலிய்யாக்காலத்தில் -அறியாமைக்காலத்தில்- இனபந்துக்களை பேணிநடப்பவராகவும், ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தார் இவை அவருக்கு மறுமையில் பயன் அளிக்குமா? என நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள் :அவை அவருக்கு எவ்விதப் பயனையும் அளிக்காது ஏனெனில் அவர் 'எனது இரட்சகனே எனக்கு எனது குற்றத்தை மறுமை நாளில் மன்னித்தருள்வாயாக என்று ஒரு நாளாவாது அவர் கூறவில்லை. என்று பதிலளித்தார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
யாராவது ஒரு மனிதர் தனது சகோதரனைப் பார்த்து, 'காபிரே!' (நிராகரிப்பாளனே!) என்று கூறினால், அவ்விருவரில் ஒருவருக்கு அது கிடைக்கவே செய்யும். அம்மனிதன் அவர் கூறியது போன்றே இருந்தால், அது அவரைச் சேரும். அவ்வாறில்லாவிட்டால், கூறியவரை நோக்கி அது மீண்டுவிடும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
உயர்ந்தோனாகிய கண்ணியமிக்க அல்லாஹ்விடமிருந்து அறியப் பெற்றதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது அடியார்களே, மக்களுக்கு அநீதி இழைப்பதை எனக்கு நானே தடை செய்திருக்கின்றேன். (அதுபோலவே) அதை உங்களுக்கும் தடை செய்திருக்கின்றேன். எனவே நீங்கள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர்.
எனது அடியார்களே, நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் வழி தவறியவர்கள். எனவே, என்னிடம் நேர்வழிகாட்டக் கோருங்கள், நான் நேர்வழி காட்டுவேன். எனது அடியார்களே, நான் உணவளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் பசியால் வாடியிருப்பீர்கள். ஆகவே என்னிடம் வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கின்றேன். எனது அடியார்களே! நான் ஆடை அளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் ஆடையற்றவர்களே. ஆகவே என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு ஆடை அளிக்கின்றேன். எனது அடியார்களே! நீங்கள் இரவும் பகலும் பாவம் செய்கின்றீர்கள். நானோ பாவங்களை மிகவும் மன்னிப்பவன். ஆகவே என்னிடம் மன்னிப்புத் தேடுங்கள், நான் உங்களை மன்னிக்கின்றேன்.
எனது அடியார்களே! நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்குத் தீங்கு செய்கின்ற நிலையை நீங்கள் அடைய முடியாது. இன்னும் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்கு எந்த நன்மையையும் செய்து விட முடியாது. எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்குப் பின்னால் வருபவர்களும் உங்களுள் மனிதர்கள், ஜின்கள் ஆகிய நீங்கள் அனைவரும் என்னை வணங்குவதில் மிகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும், பக்திமிக்கவர்களாகவும் இருந்து என்னை வணங்கினாலும், அது எந்த விதத்திலும் என்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவடையச் செய்வதில்லை. எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களும், உங்களுள் மனிதர்கள் ஜின்கள் ஆகிய அனைவரும் எத்தனை தான் கெட்டவர்களாக இருந்து குழப்பங்களை விளைவித்தாலும், அது என்னுடைய ஆட்சியின் எல்லையை எள்ளளவும் குறைத்து விடாது. என்னுடைய அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்கு பின்னால் வருபவர்களும் மனிதர்களும், ஜின்களும் ஒரே இடத்தில் கூடி நின்று என்னிடத்தில் வேண்டியதெல்லாம் கேட்டகவும், அவ்வாறு நீங்கள் கேட்பதையெல்லாம் நான் தந்தாலும் அது என்னிடமிருப்பதை, ஓர் ஊசி முனையைக் கடலில் முக்கி எடுப்பதால் குறையும் அளவிற்குக் கூட குறைத்து விடுவதில்லை. எனது அடியார்களே! இவைதான் உங்களுடைய செயல்கள். அவற்றைக் கொண்டே நான் உங்களை கணிக்கின்றேன். அவைகளை வைத்துக் கொண்டு தான் நான் உங்களுக்கு பின்னர் கூலி தருகின்றேன். ஆகவே உங்களில் நலவைப் பெற்றுக் கொண்டவர் அல்லாஹ்வைப் புகழட்டும். நலவு அல்லாதவற்றைக் காண்பவர்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் குறைகூற வேண்டாம்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும் போது, அவர், அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படுபவன் வேறு எவருமில்லை முஹம்மத் -ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்- அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று உறுதிமொழி கூறுவார்.
இதுதான், (இறை)நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ்; இம்மையிலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச்செய்வான் ' எனும் (14:27ஆவது) இறைவசனத்தின் கருத்தாகும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'செயல்கள் அனைத்தும் எண்ணத்தைக் கொண்டே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தாம் எண்ணியதற்கேட்பவே கூலி கிடைக்கிறது. ஆகவே ஒருவர் இறைவனுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வாரேயானால் அது அல்லாஹ்வுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவுமே இருக்கும். ஒருவர் ஹிஜ்ரத் செய்வது சில உலக இலாபங்களுக்காக என்றால், அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற் காகத்தான் என்றால் அவர் அதற்கான பலனையே அடைவார். இமாம் புஹாரியின் அறிவிப்பில் ' செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும்; தாம் எண்ணியதற்கேட்பவே கூலி கிடைக்கிறது' என்று இடம்பெற்றுள்ளது.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அபீ ஸீனியாவில் தாம் கண்ட தேவாலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் தெரிவித்தார்கள். அந்த தேவாலயம் 'மாரியா' என்று சொல்லப்படுகிறது. அதில் கண்ட உருவங்களையும் உம்மு ஸலமா (ரழி) குறிப்பிட்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்'அவர்களில் நல்லடியான் அல்லது நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். அவர்கள்தான்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிகவும் தீயவர்களாவர்;'என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'நிச்சயமாக அல்லாஹ் தூயவன், அவன் தூயவைகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் தனது தூதர்களிடம் எதைச் செய்யும்படி கட்டளையிட்டானோ, அதையே நம்பிக்கையாளர்களையும் (முஃமின்களையும்) செய்யும்படி கட்டளையிட்டுள்ளான்." 'தூதர்களே! தூயவைகளிலிருந்தே உண்ணுங்கள், நற்செயல்களையே செய்யுங்கள்' என்று கூறிய எல்லாம் வல்ல அல்லாஹ் ''நம்பிக்கையாளர்களே! நான் உங்களுக்குத் தந்துள்ளவற்றில் தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்'' என்றும் கூறியுள்ளான். பின்னர் பெருமானர் (ஸல்) அவர்கள் அதிக தூரம் பயணம் செய்த ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். தலைவிரிகோலமாக, மாசு படிந்தவராக அவர் தனது கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தி ' எனது இரட்டசகனே! எனது இரட்சகனே! என கதறுகிறார். ஆனால் அவர் தனது உணவைப் பெறும் வழி தடுக்கப்பட்டதாக (ஹராமானதாக) இருக்கின்றது, அவர் அருந்தும் பானம் தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அவரது உடை தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அவரது மொத்த வாழ்க்கையே ஹராமான வழியில் தான் இருக்கின்றது. இந்த நிலையில் அவர் எவ்வாறு இறைவனிடமிருந்து பதிலை எதிர்பார்க்க முடியும்!
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
ஒரு நாள் நாங்கள் எல்லோரும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது வெண்ணிற ஆடையும், கரு நிற முடியும் கொண்ட ஒரு மனிதர் எங்கள் முன் வந்து நின்றார். பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் தென்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நடந்து சென்று நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன் அமர்ந்தார். அவரது முழங்கால்களை நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களின் முழங்கால்களுடன் சேர்த்தும், இரு கைகளைக் தனது கால்களின் மீது வைத்தும் அமர்ந்தார். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களை நோக்கி 'முஹம்மதே, இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்' என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்கள் 'இஸ்லாம் என்பது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது இறைவனின் தூதர் என்றும் சாட்சியம் கூறுவது, தொழுகையை நிறை வேற்றுவது, ஸகாத் கொடுப்பது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களால் முடிந்தால் ஹஜ் செய்வது இவைகளாகும் என்றார்கள். இதற்கு அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். அவர் கேள்வி கேட்பதும் அதனை அவரே உண்மைப்படுத்துவதும் எம்மை ஆச்சரியத்திற்குற் படுத்தியது. பின்னரவர் 'ஈமான் குறித்து எனக்குச் சொல்லுங்கள்' என்றார். 'அது அல்லாஹ்வின் மீதும் அவனது வானவர்கள், அவனது வேதங்கள், அவனது தூதர்கள், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும், நல்லவைகளும் தீயவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்றும் நம்புவதுமாகும்' என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பதில்
கூற, இதைக் கேட்ட அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். தொடர்ந்து அவர் 'இஹ்ஸான் பற்றி எனக்குச் சொல்லுங்கள்' என்றார். 'நீங்கள் அல்லாஹ்வை நேரில் பார்ப்பது போன்று வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்காத போதிலும் அவன் மெய்யாகவே உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்' எனச் சொன்னார்கள். பின்னர் அவர் 'எனக்கு நியாயத் தீர்ப்பு நாள் குறித்துச் சொல்லுங்கள்' என்றார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'இந்தக் கேள்வியைக் கேட்பவரை விட கேட்கப்படுபவர் அதிகமாக அறிந்தவர் அல்லர்' என்றார்கள். (அதாவது அல்லாஹ் மாத்திரமே அதன் நேரத்தை அறிவான்). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். மேலும் காலணிகளில்லாத, முறையான ஆடைகளற்ற, வறியவர்களான ஆடுமேய்ப்போர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள்' என்றார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றுவிட்டார். நான் அங்கேயே சிறிது நேரம் தாமதித்தேன். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உமரே! கேள்வி கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?' எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்' என்றேன் நான். நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்' என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்