Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 3 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

பதிவாகிய நூல்

அறிவிப்பாளர்

எல்லா அறிவிப்பாளர்களையும் காட்டு (53)
அல்லாஹ்வின் தூதரே! ஹவ்ளுல் கவ்ஸரின் பாத்திரங்கள் எத்தனை? என நபியவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எவன் கைவசம் முஹம்மதின் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, அதன் பாத்திரங்கள் இருள் நிறைந்த இரவில் வானத்தின் சிறிய, பெரிய நட்சத்திரங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கின்றன. சுவர்க்கத்தின் பாத்திரங்களில் எவர் தண்ணீர் அருந்துகிறாரோ அவருக்கு இறுதி வரை தாகமெடுக்காது. சுவர்க்கத்திலிருந்து இரண்டு ஆறுகள் ஊற்றெடுக்கின்றன. அதில் நீர் அருந்தியவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது அதன் அகலமோ சிரியா (ஷாம்) தேசத்திலுள்ள அம்மான், ஈலா ஆகிய ஊர்களுக்கிடையே உள்ள தூரத்திற்குச் சமமாக இருக்கும். அதன் தண்ணீரோ பாலைவிட அதிக வெண்மையாய் இருக்கும். அதன் சுவையோ தேனைவிட மிக இனிமையாக இருக்கும் என்று கூறினார்கள்.'
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
யாராவது ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனைப் பார்த்து, 'பாவி' என்றோ, 'காபிர்' என்றோ கூறி, உண்மையில் அம்மனிதன் அவ்வாறில்லாவிட்டால், அத்தீர்ப்பு அவனுக்கே திரும்பி வந்துவிடும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
உயர்ந்தோனாகிய கண்ணியமிக்க அல்லாஹ்விடமிருந்து அறியப் பெற்றதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது அடியார்களே, மக்களுக்கு அநீதி இழைப்பதை எனக்கு நானே தடை செய்திருக்கின்றேன். (அதுபோலவே) அதை உங்களுக்கும் தடை செய்திருக்கின்றேன். எனவே நீங்கள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர். எனது அடியார்களே, நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் வழி தவறியவர்கள். எனவே, என்னிடம் நேர்வழிகாட்டக் கோருங்கள், நான் நேர்வழி காட்டுவேன். எனது அடியார்களே, நான் உணவளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் பசியால் வாடியிருப்பீர்கள். ஆகவே என்னிடம் வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கின்றேன். எனது அடியார்களே! நான் ஆடை அளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் ஆடையற்றவர்களே. ஆகவே என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு ஆடை அளிக்கின்றேன். எனது அடியார்களே! நீங்கள் இரவும் பகலும் பாவம் செய்கின்றீர்கள். நானோ பாவங்களை மிகவும் மன்னிப்பவன். ஆகவே என்னிடம் மன்னிப்புத் தேடுங்கள், நான் உங்களை மன்னிக்கின்றேன். எனது அடியார்களே! நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்குத் தீங்கு செய்கின்ற நிலையை நீங்கள் அடைய முடியாது. இன்னும் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்கு எந்த நன்மையையும் செய்து விட முடியாது. எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்குப் பின்னால் வருபவர்களும் உங்களுள் மனிதர்கள், ஜின்கள் ஆகிய நீங்கள் அனைவரும் என்னை வணங்குவதில் மிகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும், பக்திமிக்கவர்களாகவும் இருந்து என்னை வணங்கினாலும், அது எந்த விதத்திலும் என்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவடையச் செய்வதில்லை. எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களும், உங்களுள் மனிதர்கள் ஜின்கள் ஆகிய அனைவரும் எத்தனை தான் கெட்டவர்களாக இருந்து குழப்பங்களை விளைவித்தாலும், அது என்னுடைய ஆட்சியின் எல்லையை எள்ளளவும் குறைத்து விடாது. என்னுடைய அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்கு பின்னால் வருபவர்களும் மனிதர்களும், ஜின்களும் ஒரே இடத்தில் கூடி நின்று என்னிடத்தில் வேண்டியதெல்லாம் கேட்டகவும், அவ்வாறு நீங்கள் கேட்பதையெல்லாம் நான் தந்தாலும் அது என்னிடமிருப்பதை, ஓர் ஊசி முனையைக் கடலில் முக்கி எடுப்பதால் குறையும் அளவிற்குக் கூட குறைத்து விடுவதில்லை. எனது அடியார்களே! இவைதான் உங்களுடைய செயல்கள். அவற்றைக் கொண்டே நான் உங்களை கணிக்கின்றேன். அவைகளை வைத்துக் கொண்டு தான் நான் உங்களுக்கு பின்னர் கூலி தருகின்றேன். ஆகவே உங்களில் நலவைப் பெற்றுக் கொண்டவர் அல்லாஹ்வைப் புகழட்டும். நலவு அல்லாதவற்றைக் காண்பவர்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் குறைகூற வேண்டாம்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்