Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 5 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'அல்லாஹ் சுவர்க்கத்தையும் நரகத்தையும் படைத்து விட்டு, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சுவர்க்கத்துக்கு அனுப்பி சுவர்க்கத்தையும், சுவர்க்கவாசிகளுக்காக நான் தயார்செய்தவற்றையும் பார்ப்பீராக என்று கூறினான். அவர் அதனை பார்த்துவிட்டு வந்து உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக எவரும் அதன் இன்பம் பற்றி கேள்விப்பட்டால்; அதில் நுழைந்து விடவே நினைப்பர். உடனே அந்த சுவர்க்கம் வெறுக்கப்டபடக்கூடிய விடயங்களால் சூழ்ந்திருக்க கட்டளைப் பிரப்பித்தான். மீண்டும் அங்கு சென்று சுவர்க்கவாசிகளுக்கு தான் தயார்செய்தவற்றை பார்த்து வருமாறு கூறினான் அங்கு சென்று பார்த்த போது சுவர்க்கம் வெறுக்கத்தக்க விடயங்களால் சூழப்பட்டிருந்தது. அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக அதனுள் எவரும் நுழைய மாட்டார்களோ என நான் பயப்படுகிறேன். பின் நரகத்தையும் நரகவாதிகளுக்கு தான் தயார்ப்படுத்திவைத்திருப்பவற்றை பார்ப்பீராக என ஜிப்ரீலிடம் அல்லாஹ் கூற, அதனைச் சென்று பார்த்த போது அது அடுக்கடுக்காக இருப்பதை கண்டார்.பின் திருப்பிவந்து உனது கண்ணியத்தின் மீது ஆணையாக அதில் எவரும் நுழைய விரும்ப மாட்டார்கள். உடனே அல்லாஹ் நரகத்தை இச்சைகளால் சூழ்ந்திருக்க கட்டளைப்பிரப்பித்தான் பின் மீண்டும் அதனை பார்த்து வருமாறு அவருக்கு கட்டளையிட்டான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸ்லாம் அவர்கள் சென்று பார்த்த போது அது இச்சைகளால் சூழப்பட்டிருந்தது.உடனே திரும்பி வந்து (இறைவா) உனது கண்ணியத்தி;ன் மீது சத்தியமாக அதனுள் நுழையாது எவறும் தப்ப மாட்டார்கள் என நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்.'
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்.
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்: 'அல்லாஹ்வின் தூதரே, -ஒருவிடயத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி- எம்மில் ஒருவருக்கு இது போன்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன - அவர் அது பற்றி பேசுவதை விட நெருப்புக் கனலாக இருக்க விரும்புகிறார்', அப்போது நபியவர்கள் 'அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்,ஷைத்தானின் சூழ்ச்சியை மனக்குழப்பமாக மாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறினார்கள்.
சரியானது இமாம்களான அபூதாவூத், குப்ரா எனும் நூலில் நஸாஈ ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வும் இன்னாரும் நாடியது என்று கூறாதீர்கள். மாறாக அல்லாஹ் நாடினான் பின்னர் இன்னாரும் நாடினார் என்று கூறுங்கள்".
ஒட்டுமொத்த வழிகள் ஊடாக சரியாகியது (ஸஹீஹ்) இமாம்களான அபூதாவூத், குப்ரா எனும் நூலில் நஸாஈ, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
எமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) இடையில் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்'
சரியானது இமாம்களான திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது
பெண்களின் ஆடையை அணியும் ஆண்களையும், ஆண்களின் ஆடையை அணியும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.
சரியானது குப்ராவில் இமாம் நஸாஈயும், இமாம் இப்னு மாஜா அதே பொருளிலும், இமாம் அஹ்மதும் இதை பதிவு செய்துள்ளனர்