Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 22 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
(பின்னர் அந்நாளில் அருட்கொடைகள் பற்றி நிச்சயமாக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்) என்ற வசனம் இறங்கிய போது (அத்தகாஸுர் : 8) அஸ்ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரே எந்த அருட்கொடைபற்றி மறுமையில் விசாரிக்கப்டும்! 'அஸ்வதான்' எனும் ஈத்தம் பழமும் நீருமா? என்று வினவ அதற்கு :அறிந்து கொள்ளுங்கள்! அந்த அருட்கொடை பற்றியும்; அந்த விசாரணையில் இருக்கும் என்று பதிலளித்தார்கள்.
நம்பகமானது (ஹஸன்) இமாம் திர்மிதி, இமாம் இப்னு மாஜா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது
யார் ஒரு முஸ்லிமிற்குத் தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். மேலும் எவன் ஒருவன் முஸ்லிமை சிரமத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனைக் சிரமத்தில் ஆழ்த்துவான்.
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
நான் நபியவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். ஒரு நாள், நாம் பயணித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு சமீபமாகச் சென்றுவிட்டேன். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய தூதரே! என்னை நரகை விட்டுத் தூரப்படுத்தி, சுவனத்தில் நுழைய வைக்கும் ஒரு அமலை எனக்குக் காட்டித் தாருங்கள்' எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள், 'நீங்கள் மிக முக்கியமான ஒன்றைப் பற்றிக் கேட்டுவிட்டீர்கள். இதை யாருக்கெல்லாம் அல்லாஹ் இலகுபடுத்திக் கொடுக்கின்றானோ, அது அவர்களுக்க இலகுவாக இருக்கும். நீங்கள் அல்லாஹ்வை -அவனுக்கு எந்த இணையும் கற்பிக்காத நிலையில் - வணங்க வேண்டும். மேலும், தொழுகையையும் நிலைநாட்ட வேண்டும். ஸகாத்தைக்கொடுக்கவேண்டும். ரமழானில் நோன்பு நோற்கவேண்டும். கஃபாவை ஹஜ் செய்யவேண்டும்.' என்று கூறிவிட்டு, 'நன்மையின் வாயில்களை உனக்கு அறிவித்துத் தரட்டுமா? நோன்பு ஒரு கேடயம். நீர் நெருப்பை அனைப்பது போன்று, தர்மம் பாவங்களை அனைத்துவிடும். ஒரு மனிதன் நடு இரவில் தொழவதும் (நன்மையின் ஒரு வாயிலாகும்.) பின்பு "அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து விலகிவிடும்; அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும், ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களின் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது." என்ற வசனத்தை ஓதினார்கள். பின்பு நபியவர்கள், 'ஒரு விடயத்தின் தலையான அம்சத்தையும், அதன் பிரதான தூணையும், அதன் உயர்நிலையையும் உனக்குக் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம்! அல்லாஹ்வுடைய தூதரே!' எனக் கூறியபோது, 'தலையான அம்சம் இஸ்லாமாகும். அதன் பிரதான தூண் தொழுகையாகும். அதன் உயர்நிலை ஜிஹாதாகும்.' என்று கூறிவிட்டு, 'அவை அனைத்தையும் பாதுகாத்துத் தரும் ஒன்றைக் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு நான், ஆம்! அல்லாஹ்வுடைய நபியே! எனக் கூறியதும், தமது நாவைப் பிடித்து, 'இதைத் தடுத்துக்கொள்' என்று கூறினார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய நபியே! நாம் பேசுவதற்கெல்லாம் குற்றம் பிடிக்கப்படுவோமா?' எனக் கேட்டபோது, 'உன் தாய் உன்னை இழக்கட்டும். முஆதே! மக்களை நரகில் முகங்குப்புற எறிந்து விடுவது, அவர்களது நாவின் அறுவடைகளைத் தவிர வேறென்ன இருக்கமுடியும்?'
ஒட்டுமொத்த வழிகள் ஊடாக சரியாகியது (ஸஹீஹ்) இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன் என்று கூறி பின்வருமாறு அறிவுரை கூறினார்கள் : அல்லாஹ்வை நீ மனதிற் கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வை மனதிற் கொள். நீ அவனை உன் முன் காண்பாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுனால் அல்லாஹ்விடமே உதவிதேடு. இந்த உலகமே ஒன்று திரண்டு வந்து உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும், அல்லாஹ் ஏற்கனவே உனக்கு எழுதி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் செய்திட முடியாது. இன்னும் இந்த உலகமே ஒன்று திரண்டு வந்து உனக்கு தீங்கிழைத்திட முயன்றாலும், அது அல்லாஹ் உனக்கு ஏற்கனவே எழுதிவைத்துள்ளதை தவிர வேறு எந்த தீங்கையையும் ஏற்படுத்திட முடியாது. விதிகள் எழுதப்பட்ட எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. விதிகள் எழுதப்பட்ட ஏடுகளும் காய்ந்து விட்டன".
சரியானது இந்த ஹதீஸை இமாம் திர்மிதி மற்றும் ஏனையோர் பதிவு செய்துள்ளனர்.
'எந்தப் பாவமும் இல்லாத நிலையில் (பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில்)அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை, முஃமினான ஆணும், பெண்ணும் தங்கள் சுய வாழ்விலும், தங்கள் குழந்தைகளிலும், செல்வத்திலும் சோதனைகளை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.'
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
' (இறை) கோபத்திற்கு உள்ளானோர்; யூதர்கள் ஆவர். கிறிஸ்தவர்கள் வழிதவறியோர் ஆவர்'
சரியானது இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்