Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 80 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்த பின் அல்லாஹ் தஆலா, 'நான் உங்களுக்கு மேலதிகமாக ஒரு விடயத்தைத் தருவதை விரும்புகின்றீர்களா?' என்று கேட்பான். அப்போது அவர்கள், 'நீ எங்களது முகங்களை பிரகாசமாக்கவில்லையா? எங்களை நரகில் இருந்து பாதுகாத்து, சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா?' என்று கேட்பார்கள். அப்போது அல்லாஹ் திரையை நீக்குவான். அவர்களுக்கு அல்லாஹ்வைப் பார்ப்பதை விட, விருப்பமான வேறொன்றும் வழங்கப்பட்டிருக்கமாட்டாது.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நான் அல்லாஹ்வின் தூதரிடம் : அல்லாஹ்வின் தூதரே தங்களுக்குப் பிறகு இஸ்லாத்தைப் பற்றி எவரிடமும் கேட்டகத் தேவையில்லாத அளவு எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டேன் எனக் கூறி அதிலேயே உறுதியாக நிலைத்திருப்பீராக எனக் கூறினார்கள்.
சரியானது இமாம் முஸ்லிம் மற்றும் இமாம் அஹ்மத் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது
உங்களில் யாராவது, உடலில் ஆரோக்கியத்துடனும், தன் வீடு மற்றும் குடும்பத்தில் பாதுகாப்புடனும், அன்றைய தினத்துக்கு அவசியமான உணவு கையில் இருக்கும் நிலையிலும் காலைப் பொழுதை அடைகின்றாரோ, அவர் முழு உலகமும் வழங்கப்பட்டதைப் போன்றவர் ஆகும்.
நம்பகமானது (ஹஸன்) இமாம் திர்மிதி, இமாம் இப்னு மாஜா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது
'சில மனிதர்கள் அல்லாஹ்வின் செல்வத்தை தான் விரும்பிய விதத்தில் அநியாயமான முறையில் கையாள்கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே உரியதாகும்.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதற்கேற்பவே கூலி கிடைக்கிறது. எவரின் ஹிஜ்ரத் ( தேசம் துறந்து செல்லல்) அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் நோக்காகக் கொண்டமைந்தால் அவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்கும் அவனின் திருத்தூதருக்குமானதாக அமையும். எவரின் ஹிஜ்ரத் உலக நலன்களை அடைந்து கொள்வதை நோக்காகக் கொண்டிருந்தால், அல்லது ஒரு பெண்ணை திருமணம் முடிக்க வேண்டும் என்றிருந்தால் அவரின் ஹிஜ்ரத் அதற்குரியதாகவே அமையும்'.
சரியானது ஹதீஸ் கலை இமாம்களான புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்துள்ளனர். இவர்களின் இவ்விரு புத்தகங்களும் மிகவும் சரியான தரத்தில் அமைந்த புத்தகங்களாகும்.
உங்களில் எவரும் அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணம் கொண்ட நிலையிலேயே தவிர மரணிக்கவேண்டாம்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
“நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம்: ஒரு ஆணின் பார்வை திடீரென்று ஒரு அந்நியப் பெண்ணின் மீது எவ்வித நோக்கமின்றிப் பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள்: உடனடியாக எனது பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்''.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அல்லாஹ் தடைசெய்த இந்த அசுத்தத்தைத் தவிர்த்து விடுங்கள். யார் இதைச் செய்கிறாரோ, அவர் அல்லாஹ்வின் மறைவால் தன்னை மறைத்துக் கொண்டு அல்லாஹ்விடம் தவ்பா செய்யட்டும். ஏனெனில், யார் தனது பாவங்களை நமக்கு வெளிப்படுத்துகிறாரோ, அவருக்கு எதிராக நாம் அல்லாஹ்வின் வேதத்தை நிறைவேற்றுவோம்.
சரியானது இமாம்களான ஹாகிம், பைஹகீ ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது