Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 56 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'நன்மை என்பது நற்குணமாகும், தீமையென்பது உனது மனதில் உருத்தலை ஏற்படுத்தி, மக்கள் அதனை -பார்ப்பதை –கண்டுககொள்வதை நீ வெறுப்பதாகும்.'
சரியானது முதலாம் ஹதீஸ்: இதை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார், இரண்டாம் ஹதீஸ்: இதை இமாம்களான அஹ்மத், தாரமீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
"நான்கு குணங்கள் எவனிடம் உள்ளனவோ அவன் தெளிவான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் உள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும். (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வதும், பேசும் போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்து கொண்டால் நம்பிக்கை துரோகம் செய்வதும், வழக்காடினால் நேர்மை தவறுவதும்தான் அவை (நான்கும்) ஆகும்."
சரியானது இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போது அவர்கள், “எனக்குப் பின் உங்களுக்கிடையே உலக வளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்துவிடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்” எனக் கூறினார்கள். ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?” எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது அந்த மனிதரிடம், “உமது நிலைமை என்ன? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால், நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!” எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்து விட்டு, “கேள்வி கேட்டவர் எங்கே?” என அவரைப் பாராட்டுவதைப் போன்று கேட்டார்கள். பிறகு, “நன்மையானது தீமையை உருவாக்காதுதான்; வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை, வயிறு புடைக்கத் தின்ன வைத்துக்) கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன; பச்சைப் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை; ஏனெனில்) அது (பச்சைப் புற்களைத்) தின்று வயிறு நிரம்பி விடும்போது சூரியனை நேராக நோக்கி(ப் படுத்துக் கொண்டு அசைபோடுகின்றது) சாணமிட்டு சிறுநீரும் கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை, அது அவருக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக்கொள்கிறாரோ - அவர் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்” எனக் கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது; 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை, அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை, மற்றொருவர் புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான ஈத்த மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை நட்டினார்கள். அது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்டபோது, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் காலமெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
“பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிக எண்ணிக்கையில் எனக்குக் காட்டப் பட்டீர்கள்” என்று குறிப்பிட்டார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்து கொள்கிறீர்கள். அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர் களாகவும், தீர்க்கமான யோசனை உடைய ஆண்களின் கூர்மையான அறிவைக்கூட மழுங்க வைப்பவர்களாகவும் உங்களைப் போன்று வேறு யாரையும் நான் கண்டதில்லை” என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள், “மார்க்கத்திலும் அறிவிலும் எங்களிடமுள்ள குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், “ஆம் (பாதிதான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்” என்று கூறிவிட்டு, “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்டார்கள். அப்பெண்கள் “ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்” என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆல இம்ரான் ஸுறாவின் 7வது வசனமான ' ஹுவல்லலதி அன்ஸல அலைக்கல் கிதாப..' என்ற வசனத்தை ஒதினார்கள் (கருத்து: அவன்தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான் அதில் கருத்துத் தெளிவுள்ள)முஹ்கமாத் வசனங்களும் உள்ளன.அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) முதஷாபிஹாத்களாகும். எவர்களின் உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை நாடியும் இதன் தவறான விளக்கத்தை தேடியும் அதில் பலகருத்துக்களுக்கு இடம்பாடானவற்றை பின்பற்றுகின்றனர். அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ 'நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம் அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துமுள்ளவையே என்று கூறுவார்கள் சிந்தனையுடையோரைத்தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.'(ஆலு இம்ரான் 7) (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) முதஷாபிஹாத்களை பின்பற்றுபவர்களை நீங்கள் கண்டால் அவர்களையே அல்லாஹ் உள்ளத்தில் கோளாறு உள்ளோர் எனப்பெயரிட்டுள்ளான் ஆகவே அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பீராக என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி ) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நரகவாதிகளில் குறைந்த தண்டனை உள்ளவர், நெருப்பினால் ஆன இரு செருப்பக்களும், இரு செருப்பு வார்களும் உள்ளவராவார். இவ்விரண்டின் காரணமாக அவரது மூளை, செம்புச் சட்டிகள் கொதிப்பது போன்று கொதிக்கும். அவரை விடக் கடுமையான வேதனைகொண்ட யாரும் இருக்கமாட்டார்கள் என்று அவர் நினைப்பார். ஆனாலும், அவர்தான், மிகைக்குறைந்த தண்டனை உரியவர்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, 'அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.