Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 9 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'நன்மை என்பது நற்குணமாகும், தீமையென்பது உனது மனதில் உருத்தலை ஏற்படுத்தி, மக்கள் அதனை -பார்ப்பதை –கண்டுககொள்வதை நீ வெறுப்பதாகும்.'
சரியானது முதலாம் ஹதீஸ்: இதை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார், இரண்டாம் ஹதீஸ்: இதை இமாம்களான அஹ்மத், தாரமீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
அற்பமாகக் கருதப்படும் பாவங்களை நான் எச்சரிக்கின்றேன். அற்பமாகக் கருதப்படும் பாவங்களுக்கான உதாரணமாவது, ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் இறங்கிய ஒரு கூட்டத்தினரைப் போன்றதாகும். இவர் ஒரு குச்சியைக் கொண்டவந்தார். மற்றையவர் இன்னுமொரு குச்சியைக் கொண்டுவந்தார். இவ்வாறே அவர்கள் தமது ரொட்டியை வேகவைத்து விட்டார்கள். அற்பமாகக் கருதப்படும் பாவங்களை செய்பவர், அவற்றைக் கொண்டு எப்போதாவது பிடிக்கப்பட்டால், அவரை அவை அழித்தே விடும்.
சரியானது இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்
நான், 'அல்லாஹ்வின் தூதரே! வெற்றி எவ்வாறு?' எனக் கேட்டபோது, 'உனது நாவை உன் கட்டுப்பாட்டுள் வைத்துக்கொள்! உனது வீடு உனக்கு விசாலமாக இருக்கட்டும், உன் பாவங்களை நினைத்து அழு' என்று பதிலளித்தார்கள் நபியவர்கள்.
சரியானது இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
ஒரு அடியான் பாவமொன்றை செய்து விட்டு அழகிய முறையில் வுழூசெய்து பின் எழுந்து தனது பாவத்திலிருந்திருந்து மீளும் நோக்கில் இரண்டு ரக்அத்துக்களை தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அவனை அல்லாஹ் மன்னிக்காது விட்டுவிடுவதில்லை பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆல இம்ரானின் 135 வசனத்தை ஓதிக்காட்டினார்கள் "மேலும் அவர்கள் மானக்கேடான காரியத்தை செய்துவிட்டாலோ அல்லாது தங்களுக்கு தாங்களே அநியாயம் இழைத்துக்கொண்டாலோ அல்லாஹ்வை நினைவுகூர்ந்து உடனே தங்ளது பாவங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள்".
சரியானது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, குப்ரா எனும் நூலில் இாம் நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்.
'ஆதமுடைய மகன் நிரப்பக் கூடிய பைகளில் மிகவும் கெட்டது அவனின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நிமிர்த்திக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்'.
சரியானது இமாம்களான அஹ்மத், திர்மிதீ, அந்நஸாஈ, இப்னு மாஜஹ் ஆகியோர் இதை பதிவுசெய்துள்ளனர்.
நான் அல்லாஹ்வின் தூதரிடம் : அல்லாஹ்வின் தூதரே தங்களுக்குப் பிறகு இஸ்லாத்தைப் பற்றி எவரிடமும் கேட்டகத் தேவையில்லாத அளவு எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டேன் எனக் கூறி அதிலேயே உறுதியாக நிலைத்திருப்பீராக எனக் கூறினார்கள்.
சரியானது இமாம் முஸ்லிம் மற்றும் இமாம் அஹ்மத் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது
மனிதர்களை சுவர்க்கத்தினுள் அதிகமாக நுழைவிக்கச் செய்யும் செயல்கள் என்ன என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது, அதற்கு நபியவர்கள் சுவனத்தில் அதிகம் நுழைவிப்பது அல்லாஹ்வின்மீதான அச்சமும், நற் பண்புகளுமாகும்'. என்றார்கள் மேலும் நரகத்தினுள் அதிகமாக நுழைவிக்கச் செய்யும் செயல்கள் என்ன என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது, அதற்கு நபியவர்கள் நாவும் மறையுறுப்பும் என்றார்கள்.
நம்பகமானது இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
'அல்லாஹ் நேரான பாதைக்கு ஒரு உதாரணத்தை- உவமையைக் கூறுகிறான்;: பாதையின் இரு ஓரங்களில் திறந்த வாயில்களுடன்; கூடிய இருசுவர்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலுக்கும்; ஒரு திரைசீலை உள்ளது.ஒரு அழைப்பாளர் அந்தப்பாதையின் வாயிலில் நின்று கொண்டு அனைவரும் நேரான இப்பாதையினுள் நுழைந்து நேராக செல்லுங்கள் என கூறுவார் இன்னொரு அழைப்பார் அப்பாதையின் மேலே இருந்து அவர்களில் ஒருவர் அந்த மதிலில் காணப்படும் கதவுகளை திறப்பதற்கு எத்தனித்தால் உமக்கு என்ன நேர்ந்து விட்டது ! இந்தக் கதவுகளை திறக்க வேண்டாம். அவ்வாறு திறந்தால் நீங்கள் அதற்குள் நுழைந்துவிடுவீர்கள் என அவர்களிடம் கூறுவார். இங்கு அஸ்ஸிராத் -நேரான பாதை என்பது இஸ்லாத்தைக் குறிக்கும.; இரு மதில்கள் -சுவர்கள் என்பது அல்லாஹ்வின் சட்ட வரம்புகளையும்,திறந்த கதவுகள் என்பது அல்லாஹ்வால் தடைசெய்யப்பட்ட விடயங்களையும்,பாதையின் ஆரம்பத்தில் இருந்த அழைப்பாளர் என்பது அல்லாஹ்வின் வேதத்தையும், பாதையின் மேலே இருந்த அழைப்பாளர் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இருக்கும் அல்லாஹ்வின் உபதேசியையும் குறிக்கும்.'
சரியானது இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது