Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 85 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
"உண்மையாகவே அல்லாஹ்விடம் வீரமரணத்தை வேண்டுபவர் தனது படுக்கையில் மரணித்தாலும் அல்லாஹ் அவருக்கு உயிர்த்தியாகிகளின் அந்தஸ்துக்களை அடையச் செய்வான்".
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
உங்களில் ஒருவர் பள்ளிக்குள் (மஸ்ஜிதினுள்) நுழைகையில் 'அல்லாஹும்மப்பதஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் உனது அருளின் வாயில்களை எனக்கு திறந்து தருவாயாக). அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் நான் உனது அருளை வேண்டுகிறேன்').
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அழித்தொழிக்கும் (பெரும் அழிவைத் தரும்) ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்திருங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்கள் (ஸஹாபாக்கள்) 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அநாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று (பதில்) கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
ஓர் அழைப்பாளி (மறுமையில்) அழைத்து இவ்வாறு கூறுவார் : நீங்கள் ஒரு போதும் நோய்வாய்ப்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். நீங்கள் ஒரு போதும் மரணிக்காமல் உயிருடனே இருக்கலாம். நீங்கள் ஒருபோதும் முதுமையை அடையாமல் வாலிபத்திலேயே இருக்கலாம். ஒரு போதும் சிரமப்படாமல் இன்பத்திலேயே இருக்கலாம். அதைத் தான் இவ்வசனம் கூறுகின்றது : "நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்."(ஸூரத்துல் அஃராஃப் : 43)
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
"தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. 'ஸஃபர்' மாதம் பீடை என்பதும் கிடையாது.சிங்கத்திடமிருந்து நீ எப்படி விரண் டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து விரண்டோடு."
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
யார் இஸ்லாத்தை ஏற்று, போதுமான அளவு வாழ்வாதாரமும்; வழங்கப்பட்டு, அல்லாஹ் அவருக்கு வழங்கியுள்ளதில் போதுமென்ற மனதையும் வழங்குகின்றானோ, அவர் வெற்றி பெற்று விட்டார்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
((நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கின்றவனின் நிலையையும், கொல்லனின்; நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக்கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால், (உலை ஊதுபவனோ) கொல்லனோ ஒன்று உனது ஆடையை எரித்துக் கரித்து விடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
சுத்தம் ஈமானின் பாதியாகும். 'அல்-ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்பது மீஸானின் நன்மையின் தட்டை நிறைக்கின்றது. 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் குறைகளுக்கு அப்பாற்பட்டவன்) 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அலல்hஹ்வுக்கே) ஆகிய இரண்டுமோ அல்லது ஒவ்வொன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் தெளிவான அத்தாட்சியாகும்;. பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு ஆதாரமாகும். தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மாவை விற்றுவிடுகின்றனர். ஒன்று அதனை விடுதலைபெறச் செய்கின்றனர். அல்லது அதற்கு அழிவைத் தேடித் தருகின்றனர்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்