Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 85 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆல இம்ரான் ஸுறாவின் 7வது வசனமான ' ஹுவல்லலதி அன்ஸல அலைக்கல் கிதாப..' என்ற வசனத்தை ஒதினார்கள் (கருத்து: அவன்தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான் அதில் கருத்துத் தெளிவுள்ள)முஹ்கமாத் வசனங்களும் உள்ளன.அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) முதஷாபிஹாத்களாகும். எவர்களின் உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை நாடியும் இதன் தவறான விளக்கத்தை தேடியும் அதில் பலகருத்துக்களுக்கு இடம்பாடானவற்றை பின்பற்றுகின்றனர். அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ 'நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம் அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துமுள்ளவையே என்று கூறுவார்கள் சிந்தனையுடையோரைத்தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.'(ஆலு இம்ரான் 7) (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) முதஷாபிஹாத்களை பின்பற்றுபவர்களை நீங்கள் கண்டால் அவர்களையே அல்லாஹ் உள்ளத்தில் கோளாறு உள்ளோர் எனப்பெயரிட்டுள்ளான் ஆகவே அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பீராக என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி ) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நரகவாதிகளில் குறைந்த தண்டனை உள்ளவர், நெருப்பினால் ஆன இரு செருப்பக்களும், இரு செருப்பு வார்களும் உள்ளவராவார். இவ்விரண்டின் காரணமாக அவரது மூளை, செம்புச் சட்டிகள் கொதிப்பது போன்று கொதிக்கும். அவரை விடக் கடுமையான வேதனைகொண்ட யாரும் இருக்கமாட்டார்கள் என்று அவர் நினைப்பார். ஆனாலும், அவர்தான், மிகைக்குறைந்த தண்டனை உரியவர்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, 'அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஷைத்தான் எனக்கும், எனது தொழுகைக்குமிடையில் குறுக்கிட்டு எனது ஓதலை குழப்புகிறான் என்று கூறிய போது, நபியவர்கள்; "அவன்தான் ஹின்ஸப் எனப்படும் ஷைத்தான், அவன் குழப்புவதை நீர் உணர்ந்தால் அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிவிட்டு, உமது இடது பக்கத்தில் மூன்று விடுத்தம் துப்பிவிடு' என்று கூற, நான் அவ்வாறே செய்தேன், அல்லாஹ் அவனை விட்டும் என்னை காப்பாற்றி விட்டான் என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுஜுதில் 'அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ குல்லாஹு திக்கஹு வஜில்லஹு வஅவ்வலஹு வஆகிரஹு வஅலானிய(த்)தஹு வஸிர்ரஹு' என்று கூறுவார்கள். இதன் பொருள் : யாஅல்லாஹ்! என் பாவத்தில் சிறியதையும், பெரியதையும், முதலாவதையும், கடைசியானதையும், பகிரங்கமானதையும், இரகசியமானதையும் மன்னிப்பாயாக.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது மடங்குகளில் ஒன்றாகும்;. என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமானதாயிற்றே'' என்று கேட்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள்,'(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்' என்றார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, 'சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பான். அதற்கு அவர்கள் 'எங்கள் இரட்சகனே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் 'திருப்தி அடைந்தீர்களா?' என்று கேட்பான். அதற்கு அவர்கள் 'உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா?' என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் 'அதை விடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப் போகிறேன்' என்பான். அவர்கள் 'அதிபதியே! அதைவிடச் சிறந்தது எது?' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்கள்மீது என் அன்பை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன்' என்று கூறுவான்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்' (அல்லாஹ் தூயவன்; அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன் உதயமாகும் இவ்வுலகைவிடவும் எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்