Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 35 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
"நம்மிடமிருந்து ஒரு விடயத்தைக் கேட்டு, அதைக் கேட்டது போன்றே பிறருக்கு எத்திவைப்பருக்கு அல்லாஹ் செலிப்பை ஏற்படுத்துவானாக. அதை நேரடியாகக் கேட்டவரை விட எத்திவைக்கப்பட்டவர் அதிக அறிவுடையவராக இருக்கலாம்".
சரியானது இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
'நான் ஒரு பயணத்தின்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (வுழூச் செய்தபோது) அவர்களின் இரண்டு காலுறைகளையும் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அதைவிட்டுவிடுவீராக, கால்கள் இரண்டும் வுழூவுடன் இருக்கும் நிலையில்தான் காலுறைகளை அணிந்தேன்' என்று கூறிவிட்டு அவ்விரு காலுறைகளின் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கரத்தால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கரத்தால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கரத்தால்தான் உண்கிறான்; இடக்கரத்தால்தான் பருகுகிறான்'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
யாராவது ஒரு மனிதர் தனது சகோதரனைப் பார்த்து, 'காபிரே!' (நிராகரிப்பாளனே!) என்று கூறினால், அவ்விருவரில் ஒருவருக்கு அது கிடைக்கவே செய்யும். அம்மனிதன் அவர் கூறியது போன்றே இருந்தால், அது அவரைச் சேரும். அவ்வாறில்லாவிட்டால், கூறியவரை நோக்கி அது மீண்டுவிடும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
ஒரு முஸ்லிமின் கீழ் ஆடை கணுக்காலின் பாதியளவு இருக்கும். அதில் இருந்து இரு கரண்டைக் கால் வரை (செல்வது) குற்றமில்லை. இரு கரண்டைக் காலுக்கும் கீழால் செல்வது நரகத்திற்கே உரியது. யார் பெருமைக்காக தனது கீழ் ஆடையை இழுத்துக்கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்.
சரியானது இமாம்களான அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்று, துஆக் கேட்கும் போது இவ்வாறு கூறுவார்கள் : «أَذْهِبِ الْبَاسَ، رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا». (பொருள் : மனிதர்களின் இரட்சகனே! நோயை நீக்கிவிடுவாயாக! மேலும் குணப்படுத்தி விடுவாயாக! நீயே குணப்படுத்தக் கூடியவன். நீ வழங்கும் ஆரோக்கியத்தைத் தவிர வேறு குணப்படுத்தல் கிடையாது. எந்தவொர நோயையும் விட்டு வைக்காமல் குணப்படுத்தி விடுவாயாக!)
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வாசனை வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வார்கள்.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்