Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 22 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கரத்தால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கரத்தால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கரத்தால்தான் உண்கிறான்; இடக்கரத்தால்தான் பருகுகிறான்'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
யாராவது ஒரு மனிதர் தனது சகோதரனைப் பார்த்து, 'காபிரே!' (நிராகரிப்பாளனே!) என்று கூறினால், அவ்விருவரில் ஒருவருக்கு அது கிடைக்கவே செய்யும். அம்மனிதன் அவர் கூறியது போன்றே இருந்தால், அது அவரைச் சேரும். அவ்வாறில்லாவிட்டால், கூறியவரை நோக்கி அது மீண்டுவிடும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்று, துஆக் கேட்கும் போது இவ்வாறு கூறுவார்கள் : «أَذْهِبِ الْبَاسَ، رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا». (பொருள் : மனிதர்களின் இரட்சகனே! நோயை நீக்கிவிடுவாயாக! மேலும் குணப்படுத்தி விடுவாயாக! நீயே குணப்படுத்தக் கூடியவன். நீ வழங்கும் ஆரோக்கியத்தைத் தவிர வேறு குணப்படுத்தல் கிடையாது. எந்தவொர நோயையும் விட்டு வைக்காமல் குணப்படுத்தி விடுவாயாக!)
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் அவரின் இறுதி சடங்கில் பின்துயர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தல், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் பதிலுரைத்தல்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
"நீங்கள் சாதாரண பட்டையோ அலங்காரப்பட்டையோ அணிய வேண்டாம். தங்கப் பாத்திரத்திலோ வெள்ளிப் பாத்திரத்திலோ குடிக்க வேண்டாம். அவ்விரண்டின் தட்டுகளில்; நீங்கள் சாப்பிட வேண்டாம். ஏனெனில் அவை இவ்வுலகில் அவர்களுக்குரியதும், மறுமையில் எங்களுக்குரியதுமாகும்".
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.