Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 55 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
நான் நபி (ஸல்) அவர்களிடம், நன்மையையும், பாவத்தையும் பற்றிக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: 'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தும். மக்கள் அதைக் காண்பதை நீ வெறுப்பாய்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். தேடிச் செல்லாதீர்கள் ஒருவருக்கொருவார் பொறாமை கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், கோபித்துக் கொள்ளாதீர்கள், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்கள் என்ற வகையில் சகோதரர்களாக இருங்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'யார் என்மீது (நான் கூறியதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'பூரண ஈமானைப் பெற்ற விசுவாசி யாரெனில் சிறந்த பண்புகளுடையவரே. மேலும் உங்களில் சிறந்தவர், தங்களின் மனைவியரிடம் சிறந்தவர்'.
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
மனிதர்களை சுவர்க்கத்தினுள் அதிகமாக நுழைவிக்கச் செய்யும் செயல்கள் என்ன என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது, அதற்கு நபியவர்கள் சுவனத்தில் அதிகம் நுழைவிப்பது அல்லாஹ்வின்மீதான அச்சமும், நற் பண்புகளுமாகும்'. என்றார்கள் மேலும் நரகத்தினுள் அதிகமாக நுழைவிக்கச் செய்யும் செயல்கள் என்ன என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது, அதற்கு நபியவர்கள் நாவும் மறையுறுப்பும் என்றார்கள்.
நம்பகமானது இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்து விட்டது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும், ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ (அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தான்) என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள், ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோருவீராக!› என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள். அதற்கு அவர், ‘‘எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?” என்று கேட்டார்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நீர் எங்கிருந்த போதிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! ஒரு பாவத்திற்குப் பின்னர் ஒரு நன்மை செய்துவிடு. அது அப்பாவத்தை அழித்துவிடும். மேலும், மக்களோடு நற்பண்புடன் நடந்துகொள்.
இது நம்பகமானது (ஸஹன்) என இமாம் திர்மிதி கூறியுள்ளார். இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்