Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 10 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்ஸாரிப் பெண் ஒருவரை விழித்து -இப்பெண்ணின் பெயரை இப்னு அப்பாஸ் கூறினார்கள் ஆனால் நான் அவளுடைய பெயரை மறந்துவிட்டேன்.- 'எம்முடன் ஹஜ்ஜு செய்வதற்கு வருவதை உம்மை எது தடுத்தது?' என வினவியதற்கு அந்தப் பெண்மணி எம்மிடம் நீர் இரைக்கும் இரு ஒட்டகங்கள்தானிருந்தன. அவைகளில் ஒன்றில் தன் கணவரும் மகனும் ஹஜ்ஜுக்கு சென்றுவிட்டனர். மற்றதை நாம் நீர் இரைப்பதற்காக விட்டுச் சென்றனர் என்று கூறினாள். அப்பொழுது இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: ரமழான் மாதம் வந்துவிட்டால் நீங்கள் உம்ராவை நிறை வேற்றுவாயாக ! ஏனெனில் அம்மாதத்தில் நிறை வேற்றப்படும் உம்ரா வணக்கம் ஹஜ்ஜு வணக்கத்துக்கு நிகராகும் என்று கூறினார்கள்
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
' துல்ஹிஜ்ஜா பத்து நாட்களில் செய்யும் அமல்கள்தான் ஏனைய நாட்களில் செய்யும் அமல்களை விடவும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாக உள்ளது என்று நபி ஸல்லல்லாஹு அவர்கள் கூறியபோது, ஸஹாபாக்கள்: அல்லாஹ்வின் தூதரே 'ஜிஹாதை விடவுமா?' என்று கேட்டனர். அதற்கு 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' எனப் பதிலளித்தார்கள்.
சரியானது இமாம்களான புஹாரி, அபூதாவூத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பு அபூதாவூத் உடையதாகும்.
அல்லாஹ்வின் தூதரே! அறப்போர் புரிவதை மிகச்சிறந்த அமலாக நாம் காண்கின்றோம். நாமும் அறப் போரில் கலந்துகொள்ளட்டுமா? அதற்கு நபியவர்கள் இல்லை, எனினும் அறப்போரில் மிகச்சிறந்தது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகும் எனக் கூறினார்கள் .
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
'லப்பைக், அல்லாஹும்ம லப்பைக். லப்பைக், லா ஷரீக்க லக லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக, வல்முல்க்க லா ஷரீக்க லக்' என்பதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் 'தல்பியா' ஆகும். (இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! உனக்கு இணை துணை கிடையாது. எல்லாப் புகழும் அருட் கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானக –நிகர்- யாருமில்லை). அப்துல்லாஹ் இப்னு உமர் - ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்; - لَبَّيْكَ لَبَّيْكَ، وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ بِيَدَيْكَ، لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ. 'லெப்பைக்க லெப்பைக்க வஸஃதைக்க வல்கைய்ரு பியதைகக்க,லெப்க்க வர்ரஃபாஉ இலைக்க வல்அமலு' எனும் வாசகத்தை மேலதிகமாக கூறுபவர்களாக இருந்தார்கள். 'யா அல்லாஹ் நான் உனது அழைப்பை ஏற்று வந்துவிட்டேன் மேலும் உன் ; அழைப்புக்கு நான் பதிலளித்தேன். உன்னிடம்; நல்வாழ்வைத் தேடுகிறேன்;.(உனக்கு கட்டுப்பட்டு வழிபடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்;) எல்லா நன்மைகளும் உன் கைகளில் உள்ளன. எனது எல்லா எதிர்பார்புகளும், ஆசைகளும் மற்றும் செயற்பாடும் உன்னை நோக்கியே உள்ளது.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க நாடினால் துல்ஹஜ் பிறை பிறந்ததிலிருந்து அவர் தனது உடல் ரோமங்களைக் களைய வேண்டாம். மற்றும் நகங்களை வெட்ட வேண்டாம் என்று நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அவர்கள் ஒரு தடவை ஹஜருல் அஸ்வதிடம் வந்து, அதனை முத்தமிட்டுவிட்டு இவ்வாறு கூறினார்கள் : நீ, பயனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற ஒரு கல் மாத்திரமே என்பதை நான் அறிவேன். நபியவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிருக்காவிட்டால், நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'உடலுறவில் ஈடுபடாமல், பாவங்கள் செய்யாமல் ஹஜ் செய்தவர் தனது தாய் அன்று ஈண்டெடுத்த பாலகன் போன்று திரும்புவார்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.