Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 69 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
நபி (ஸல்) அவர்கள் எமக்கு, அல்குர்ஆனின் ஒரு ஸூராவைக் கற்றுத் தருவது போன்று, எல்லா விடயங்களிலும் நன்மையைக் கேட்பதையும் கற்றுத் தருவார்கள். நபியவர்கள் இவ்வாறு கூறுவார்கள் : உங்களில் ஒருவர் ஏதாவது (முக்கிய) விடயத்தைச் செய்ய நாடினால், கடமையல்லாத இரு ரக்அத்கள் தொழுதுவிட்டு, பின்வருமாறு கூறட்டும் : 'யா அல்லாஹ்! உனது அறிவைக் கொண்டு உன்னிடம் நன்மையைக் கேட்கின்றேன். உன்னுடைய சக்தியைக் கொண்டு உன்னிடம் ஆற்றலைக் கேட்கின்றேன். உன்னுடைய பேருபகாரத்தில் இருந்து உன்னிடம் கேட்கின்றேன். நீயே ஆற்றல் மிக்கவன். என்னிடம் ஆற்றல் கிடையாது. நீயே அறிந்தவன். நான் அறியமாட்டேன். மறைவான வற்றை அதிகம் அறிந்தவன் நீயே! யா அல்லாஹ்! இந்த விடயம், எனது மார்க்கத்திற்கும், வாழ்க்கைக்கும், எனது இறுதி முடிவுக்கும் - அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும் - நன்மையானதாக இருந்தால், அதை எனக்கு விதித்து விடுவாயாக. மேலும் அதனை எனக்கு இலகுபடுத்தி விடுவாயாக! பின்பு எனக்கு அதில் பரகத் செய்து தருவாயாக! இந்த விடயம், எனது மார்க்கத்திற்கும், வாழ்க்கைக்கும், எனது இறுதி முடிவுக்கும் - அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும் - தீமையானதாக இருந்தால், என்னை விட்டும் அதைத் திருப்பிவிடுவாயாக! மேலும், அதையும் என்னை விட்டுத் திருப்பிவிடுவாயாக! நன்மை - எங்கிருந்த போதிலும் - அதை எனக்கு விதித்து விடுவாயாக! பின்பு எனக்கு அதில் திருப்தியைத் தருவாயாக! அவர் தனது தேவையைக் குறித்துச் சொல்வார் என்றும் அதில் வந்துள்ளது.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
இப்னு ஸுபைர் அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகையிலும் ஸலாம் கொடுத்ததும் பின்வருமாறு ஓதுவார்கள் : 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீகலஹூ லஹுல்முல்கு வலஹுல்ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர், லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு லஹுன் நிஃமது வலஹுல் பழ்லு வலஹுஸ் ஸனாஉல் ஹஸன். லாஇலாஹ இல்லல்லாஹு முஃக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காபிரூன்'. மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் இதனை ஓதுவார்களெனக் கூறினார்கள். பொருள் : உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் புகழனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன், தீமையிலிருந்து விலகுவதும் நன்மையின் மீது ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத்தவிர வேறெவரையும் நாங்கள் வணங்கமாட்டோம். அருட்கொடைகள் அனைத்தும் அவனுடையதே. சிறப்பும் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையன. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
பாங்கு சொல்பவர் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் (பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்)என்றால் நீங்களும் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் 'அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்' (பொருள் : அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படக்கூடிய வேறு இறைவனில்லை என்று நான் சாட்சிகூறுகிறேன்.) என்றால் நீங்களும் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் (பொருள் : (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி மொழிகிறேன்' என்றால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் ஹய்ய அலஸ்ஸலாஹ், (பொருள் தொழுகைக்காக விரைந்து வாருங்கள்) என்றால், அப்போது நீங்கள் 'லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ்' (பொருள்: நன்மையை செய்வதற்கோ தீமையிலிந்து தவிரந்திருக்கவோ அல்லாஹ்வின் உதவியின்றி முடியாது' என்று சொல்ல வேண்டும்; பிறகு அவர் 'ஹய்ய அலல்ஃபலாஹ்' என்றால் அப்போதும் நீங்கள் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லவேண்டும் பிறகு அவர் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்றால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லவேண்டும்; பிறகு அவர் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்றால் நீங்களும் 'லாஇலாஹ இல்லல்லாஹ' என்று உள்ளத்தின் உறுதியுடன் கூறினால் அத்தகையோர் சுவர்க்கம் புகுவர்'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
யார் பள்ளிவாசலுக்கு காலையிலோ, மாலையிலோ செல்கின்றாரோ, அவ்வாறு காலையிலோ, மாலையிலோ செல்லும் போதெல்லாம் சுவனத்தில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்வான்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
''உங்களில் ஒருவர் பள்ளிக்குச்சென்றால் அவர் உட்கார முன் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும்''.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது'
சரியானது இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்
நபியவர்கள் எனது கையைப் பிடித்து இவ்வாறு கூறினார்கள் : முஆதே! நான் உம்மை நேசிக்கின்றேன்! முஆதே! ஒவ்வொரு தொழுகையின் இறுதியிலும், 'அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வசுக்ரிக வஹுஸ்னி இபாததிக' (யா அல்லாஹ்! உன்னை நினைவுகூறவும், உனக்கு நன்றிசெலுத்தவும், அழகான முறையில் உன்னை வணங்கவும் எனக்கு நீ உதவுவாயாக) என்று கூறுவதை விட்டுவிட வேண்டாம். என நான் உமக்கு உபதேசம் செய்கின்றேன்.'
சரியானது இமாம்களான அபூ தாவுத், நஸாஈ, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
'வெள்ளிக்கிழமை தினத்தில் இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ 'மௌனமாக இரு' என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்'. (ஜும்ஆவின் பலனை இழந்துவிட்டாய்).
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.