Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 3 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

பதிவாகிய நூல்

நபி (ஸல்) அவர்கள் எமக்கு, அல்குர்ஆனின் ஒரு ஸூராவைக் கற்றுத் தருவது போன்று, எல்லா விடயங்களிலும் நன்மையைக் கேட்பதையும் கற்றுத் தருவார்கள். நபியவர்கள் இவ்வாறு கூறுவார்கள் : உங்களில் ஒருவர் ஏதாவது (முக்கிய) விடயத்தைச் செய்ய நாடினால், கடமையல்லாத இரு ரக்அத்கள் தொழுதுவிட்டு, பின்வருமாறு கூறட்டும் : 'யா அல்லாஹ்! உனது அறிவைக் கொண்டு உன்னிடம் நன்மையைக் கேட்கின்றேன். உன்னுடைய சக்தியைக் கொண்டு உன்னிடம் ஆற்றலைக் கேட்கின்றேன். உன்னுடைய பேருபகாரத்தில் இருந்து உன்னிடம் கேட்கின்றேன். நீயே ஆற்றல் மிக்கவன். என்னிடம் ஆற்றல் கிடையாது. நீயே அறிந்தவன். நான் அறியமாட்டேன். மறைவான வற்றை அதிகம் அறிந்தவன் நீயே! யா அல்லாஹ்! இந்த விடயம், எனது மார்க்கத்திற்கும், வாழ்க்கைக்கும், எனது இறுதி முடிவுக்கும் - அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும் - நன்மையானதாக இருந்தால், அதை எனக்கு விதித்து விடுவாயாக. மேலும் அதனை எனக்கு இலகுபடுத்தி விடுவாயாக! பின்பு எனக்கு அதில் பரகத் செய்து தருவாயாக! இந்த விடயம், எனது மார்க்கத்திற்கும், வாழ்க்கைக்கும், எனது இறுதி முடிவுக்கும் - அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும் - தீமையானதாக இருந்தால், என்னை விட்டும் அதைத் திருப்பிவிடுவாயாக! மேலும், அதையும் என்னை விட்டுத் திருப்பிவிடுவாயாக! நன்மை - எங்கிருந்த போதிலும் - அதை எனக்கு விதித்து விடுவாயாக! பின்பு எனக்கு அதில் திருப்தியைத் தருவாயாக! அவர் தனது தேவையைக் குறித்துச் சொல்வார் என்றும் அதில் வந்துள்ளது.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
யார் வெள்ளைப் பூண்டு அல்லது வெங்காயம் சாப்பிடுகின்றாரோ, அவர் எங்களை விட்டும் - அல்லது எமது பள்ளிவாசலை விட்டும் - ஒதுங்கி, தனது வீட்டில் இருந்துகொள்ளட்டும். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் காய்கறிகளும் கீரைகளும் இருந்தன. (நன்கு வேகாத காரணத்தால்) அவற்றில் (துர்)வாடை வீசுவதை நபியவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே, அவற்றைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விவரம் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அதைத் தம்முடனிருந்த ஒரு தோழருக்குக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள். அத்தோழரும் அதை உண்ண விரும்பாததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், நீங்கள் உரையாடாத (வான)வர்களுடன் நான் உரையாடுகிறேன் (அதனால்தான் நான் அதைச் சாப்பிடவில்லை)” என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
யாராவது அதானைக் கேட்ட போது, 'அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காஇமா, ஆதி முஹம்மதனில் வஸீலத வல் பழீலா, வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்' என்று கூறுகின்றாரோ, அவருக்கு மறுமையில் எனது சபாஆ (பரிந்துரை) கிடைக்கும். துஆவின் அர்த்தம் : யா அல்லாஹ் இந்த முழுமையான அழைப்பினதும் நிலையான தொழுகையினதும் ரப்பே! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வசீலா என்னும் அந்தஸ்தையும், சிறப்பையும் கொடுப்பாயாக! நீ வாக்களித்திருக்கின்ற புகழுக்குரிய அந்தஸ்துக்கு அவரை அனுப்புவாயாக.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்