Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 29 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைக் கழுவி சுத்தம் செய்)வார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையை விடலாமா?' என்று கேட்டதற்கு, ' வேண்டாம், அது ஒரு நரம்பு நோய், மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும் நாட்களின் அளவுக்குத் தொழுகையை விட்டுவிட்டு, பின்னர் குளித்து தொழுது கொள்' என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் ஒரு கூட்டத்தினரால் மண் மற்றும் குப்பை கூலங்கள் வீசப்படும் இடத்திற்குச் சென்று நின்ற நிலையில் சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவரைவிட்டு ஓதுங்கிச் சென்றேன். அப்பொழுது தன்னிடம் நெறுங்கி நிற்குமாறு நபியவர்கள் என்னைப் பணித்தார்கள். நான் அவர்களை நெருங்கி அவர்களது இரு குதிகால்களிடத்தில் நின்று (அவர்களை மறைத்துக் கொண்டேன்.) அவரகள் வுழூ செய்து தனது இரு ( خف குப்பு) காலுறைகளின் மீது தண்ணீரினால் (மஸ்ஹு) தடவிக் கொணடார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
ஒரு முஸ்லிம் அழகிய முறையில் வுழுச் செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் நிச்சயம் கிடைக்கும் என்று கூறுவதை நான் கேட்டேன். உடனே நான் என்ன அருமையான வார்த்தை! என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரழி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரழி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்ததை; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன.அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம்''.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்