Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 2 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

பதிவாகிய நூல்

“போதையூட்டக்கூடியவை அனைத்தும் மதூபானமாகும். மேலும் பேதையூட்டக்கூடியவை அனைத்தும் ஹராமாகும். இந்த உலகத்தில் மதூபானம் அருந்தி தௌபா செய்யாது அதில் திலைத்து இருந்த நிலையில் மரணிக்கிறாரோ அவர் மறுமைiயில் மதூபானம் அருந்த மாட்டார்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார். இமாம் புஹாரி அவர்கள் இதன் கடைசி வாக்கியத்தை அறிவித்துள்ளார்கள்.
'யாராவது, வேட்டை நாய், அல்லது காவல் நாய் ஆகியவையல்லாத வேறு நாய்களை வைத்துக் கொண்டிருந்தால், அவரது அமல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் இரு கீராத்கள் அளவு குறையும். ஸாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் (அல்லது பயிர்நிலங்களைப் பாதுகாக்கும் நாய்) என்றும் இணைத்துக் கூறுவார்கள். அவர்கள் விவசாயம் செய்யும் ஒருவராகக் காணப்பட்டார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.